
வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டத்தைத் தொடர்ந்து அந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது.
கடந்த அதிமுக ஆட்சியில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு பங்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என சட்டம் இயற்றப்பட்டது.
பின் , இந்த சட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது.இதனால் கடந்த நவ.1 ஆம் தேதி உயர்நீதிமன்ற மதுரை கிளை வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு செல்லாது என பரபரப்பு தீர்ப்பை வழங்கியது. இதைக் கண்டித்து பாமகவினர் ஆர்பாட்டங்களில் ஈடுபட்டதுடன் உச்சநீதிமன்றத்துக் கேவியர் மனுவையும் சிலர் தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் தற்போது உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு செல்லாது என்றும் இட ஒதுக்கீடு வழங்க மாநில அரசிற்கு அதிகாரம் உள்ளது என தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.