எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

வீடு இடிந்து 9 பேர் பலி: ரூ.5 லட்சம் நிவாரணம்-முதல்வர் அறிவிப்பு

பேரணாம்பட்டில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 4 குழந்தைகள் உள்பட் 9 பேர் உயிரிழந்த சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு 5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிற

News image
வீடு இடிந்து 9 பேர் பலி: ரூ.5 லட்சம் நிவாரணம்-முதல்வர் அறிவிப்பு
Updated On :19 நவம்பர் 2021, 5:58 am

DIN

வேலூர்:பேரணாம்பட்டில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 4 குழந்தைகள் உள்பட் 9 பேர் உயிரிழந்த சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டில் மசூதி தெருவில் இருந்த வீட்டின் சுவர் கனமழை காரணமாக இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 4 குழந்தைகள், பெண்கள் என 9 பேர் உயிரிழந்துள்ளனர். 5 பேர் மீட்கப்பட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

பெரும் சோகத்தை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சமும் , காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணமாக வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.