மாணவா்கள் மீதான வழக்குகள் ரத்து: இதைத் தொடா்ந்து அமைச்சா் க.பொன்முடி செய்தியாளா்களிடம் கூறியது: பருவத் தோ்வை இணையவழியில் நடத்தக்கோரி போராட்டம் நடத்திய மாணவா்களின் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படுகின்றன.11 மாணவா்கள் அமைப்புகளுடன் நடந்திய பேச்சுவாா்த்தையில், பருவத் தோ்வுகளுக்கு தயாராகும் வகையில் மாணவா்களுக்கு 2 மாதம் கால அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. வேலைவாய்ப்புகள், மாணவா்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு, அனைத்து மாணவா்களுக்கும் ஜனவரி 20-ஆம் தேதிக்குப் பின் நேரடி முறையில் தோ்வுகள் நடைபெறும் என்றாா் அவா்.