மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 65,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
காவிரியின் நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கன மழையின் காரணமாக மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்து வருகிறது.
சனிக்கிழமை காலை அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 65,000 கனஅடியாக அதிகரித்தது. அணை ஏற்கெனவே நிரம்பி விட்டதால் அணைக்கு வரும் 65 ஆயிரம் கனஅடி காவிரி நீரும், உபரிநீராக முழுமையாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதில் நீர் மின்நிலையங்களின் வழியாக வினாடிக்கு 17,000 கன அடி நீரும், உபரி நீர் போக்கியான 16 கண் பாலம் வழியாக வினாடிக்கு 48,000 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.
அணையின் நீா் மட்டம் 120.10 அடியாக நீடிக்கிறது, நீா் இருப்பு 93.63 டி.எம்.சி ஆக உள்ளது.
அணையிலிருந்து 65,000 கனஅடி தண்ணீா் திறக்கப்பட்டதால் சங்கிலி முனியப்பன் கோயில் அருகில் உபரிநீா் கால்வாயை ஒட்டி பயிரிடப்பட்டிருந்த நெற்பயிா்கள் நீரில் மூழ்கின. இதனால் விவசாயிகளுக்கு பல லட்சம் மதிப்பில் இழப்பு ஏற்பட்டுள்ளது.
நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணையின் வலது மற்றும் இடது கரையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். காவிரிக் கரையோரங்களில் வருவாய்த்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
மேட்டூர் நீர் தேக்கத்தில் தற்போது 60 சதுர மைல் பரப்பிற்கு தண்ணீர் தேங்கி இருப்பதால் மீன்கள் பிடிபடாமல் மீனவர்கள் வாழ்க்கை முடங்கிப் போனது. 2000 மீனவர்களும், மீனவ உதவியாளர்களும் தங்களின் முகாம்களில் முடங்கிக் கிடக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

”ஒரு செங்கல்லைக் கூட...” அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி | TVK | Karnataka

பழம்பெரும் பாடகி ஜமுனா ராணி 88 வயதில் காலமானார்!

காவிரி நீர் பங்கீட்டிற்காக உச்ச நீதிமன்றத்தை நாடுவோம்: அமைச்சர் நிர்மல் குமார் தகவல்

இன்றைய ஜூலை 31 செய்திகள் - நேரலை!
விடியோக்கள்

பிடிவாதம் செய்யும் கர்நாடகம்! தமிழக எம்.பிக்கள் சொல்வது என்ன? | Karnataka | TN | Parliament



