
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் அமெரிக்கவிலிருந்து திரும்பிய பின் தனக்கு இருமல் இருந்ததாகவும் பரிசோதித்தபோது கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது எனத் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து டிவிட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் ‘அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்’. எனப் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.