கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஸ்டாலின் தலைமையில் கோவையில் தொழில் முதலீட்டாளர் மாநாடு தொடக்கம்

கோவை கொடிசியா வளாகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 'முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு' என்ற தலைப்பில் முதலீட்டாளர்கள் மாநாடு இன்று தொடங்கியது.

News image
'முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு' என்ற தலைப்பில் முதலீட்டாளர்கள் மாநாடு இன்று தொடங்கியது.
Updated On :23 நவம்பர் 2021, 9:15 am

DIN

கோவை: கோவை கொடிசியா வளாகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 'முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு' என்ற தலைப்பில் முதலீட்டாளர்கள் மாநாடு இன்று தொடங்கியது.

Story image

முதலீட்டாளர் மாநாட்டுக்கு முன்னதாக, விழாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்.

மாநாட்டில் பங்கேற்கும் நிறுவனங்கள் சார்பில் வைக்கப்பட்டிருக்கும் கண்காட்சியை முதல்வர் பார்வையிட்டார்.

மாநாட்டில் பங்கேற்கும் நிறுவனங்கள் சார்பில் வைக்கப்பட்டிருக்கும் கண்காட்சியை முதல்வர் பார்வையிட்டார்.

இந்த மாநாட்டில் 59 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. 13 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட உள்ளன.

Story image

10 புதிய திட்டங்களை முதல்வர் தொடங்கி வைக்கிறார். மொத்தம் ரூ. 52,543 கோடி மதிப்பிலான பணிகள், திட்டங்கள் இதில் நிறைவேற்றப்பட இருக்கின்றன. 

Story image

தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, அரசு செயலர் கிருஷ்ணன், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத் தலைவர் பங்கஜ் குமார் பன்சல் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றுள்ளனர்.

Story image

கோவை கொடிசியாவில்  தொடங்கியிருக்கும் இந்த மாநாட்டில், ரூ.34,723 கோடியில் 52 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் 74,835 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story image

மேலும் பணிகள் முடிக்கப்பட்ட 10 நிறுவனங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். 3928 கோடி ரூபாய் மதிப்பில் தொடங்கப்பட்டுள்ள இந்த நிறுவனங்கள் மூலம் 3,944 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது.

Story image

13,500 கோடி மதிப்பிலான 13 புதிய நிறுவனங்களுக்கும் இன்று அடிக்கல் நாட்டப்படுகிறது. இதன் மூலம் 11,681 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் வான்வெளி, பாதுகாப்பு துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் 7 நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்படுகிறது. 485 கோடி மதிப்பீட்டில் துவங்கப்படும் நிறுவனம் மூலம்1960 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கும் விழா மேடை.

முன்னதாக, அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கும் விழா மேடை.

தமிழ்நாடு நிதிநுட்பக்கொள்கை, தமிழ்நாடு ஒற்றைச் சாளர இணையதளம் 2.O-வின் கைப்பேசி செயலி ஆகியவையும் இன்றைய நிகழ்ச்சியில் வெளியிடப்பட உள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.