நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி! தவெக அரசுக்கு 144 பேர் ஆதரவு! நம்பிக்கை வாக்கெடுப்பு: திமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு! குதிரை வேகத்தில் செயல்படும் அரசு; குதிரை பேரத்தில் ஈடுபடும் அரசு அல்ல! விஜய் பேச்சுபுஸ்பா பட பாணியில் சோபா ஆட்சி செய்யும் விஜய்! உதயநிதி கடும் விமர்சனம்! நம்பிக்கை வாக்கெடுப்பு! பேரவைக்கு வராமல் மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிப்பு!நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக நடுநிலை! - எம்.எல்.ஏ. போஜராஜன்தவெகவில் குதிரை பேரம் நடந்தது; ஜோதிடருக்கு எதற்கு அரசுப் பதவி? பிரேமலதா
/

பச்சமலையில் மலைச்சரிவு - போக்குவரத்து துண்டிப்பு!

தொடர் மழையால் பச்சமலை 6 ஆவது வளைவில் மலைச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் தம்மம்பட்டி, உப்பிலியாபுரத்திலிருந்து அரசு பேருந்துகள், பால் வண்டி வாகனங்கள் மலைக்கு அதிகாலை முதல் செல்ல முடியாமல் திரும்பி விட்டன

News image

தொடர் மழையால் பச்சமலை 6 ஆவது வளைவில் மலைச்சரிவு

Updated On :26 நவம்பர் 2021, 11:16 am IST


தம்மம்பட்டி: தொடர் மழையால் பச்சமலை 6 ஆவது வளைவில் மலைச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் தம்மம்பட்டி, உப்பிலியாபுரத்திலிருந்து அரசு பேருந்துகள், பால் வண்டி உள்ளிட்ட இதர வாகனங்கள் மலைக்கு அதிகாலை முதல் செல்ல முடியாமல் திரும்பி விட்டன. 

சேலம் மாவட்டம், கெங்கவல்லி ஒன்றியம் பச்ச மலை ஊராட்சியில், பச்சமலையில் பெரிய பக்களம், சின்னபக்களம், பெரிய நாகூர், சின்ன நாகூர், வெங்கமுடி, ஓடைக் காட்டுப் புதூர், ஓடைக்காடு, மாயம்பாடி, புன வரை, நெய்வாசல், நல்ல மாத்தி, மலங்காடு, சின்ன மங்களம், பெரிய மங்களம் உள்ளிட்ட 32 மலைக்கிராமங்கள் உள்ளன. இதில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். 

பச்சமலையில் 13 வளைவுகள் உள்ளன. இதில் தொடர் மழையால் ,6 ஆவது வளைவில் மலைச்சரிவு ஏற்பட்டுள்ளது. 

இதனால் தம்மம்பட்டி, உப்பிலியாபுரத்திலிருந்து அரசு பேருந்துகள், பால் வண்டி உள்ளிட்ட இதர வாகனங்கள் மலைக்கு அதிகாலை முதல் செல்ல முடியாமல் திரும்பி விட்டன. 

துறையூர்  வனச்சரகத்தின்  கட்டுப்பாட்டில் இம்மலை உள்ளதால், அவர்கள் சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.