உசிலம்பட்டி நகரப்புற உள்ளாட்சித் தேர்தல்: அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி விருப்பம் மனு

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் நகரப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி நிர்வாகிகள் விருப்ப மனு அளித்தனர்.
உசிலம்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட 24 வார்டுகள் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி நிர்வாகிகள் விருப்ப மனு அளித்தனர். 
உசிலம்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட 24 வார்டுகள் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி நிர்வாகிகள் விருப்ப மனு அளித்தனர். 


உசிலம்பட்டி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் நகரப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி நிர்வாகிகள் விருப்ப மனு அளித்தனர்.

உசிலம்பட்டி கவுண்டம்பட்டி சாலையில் உள்ள தனியார் திருமண மஹாலில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி விருப்ப மனு பெரும் கூட்டம் நடைபெற்றது. 

இக்கூட்டத்திற்கு அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பி.வி. கதிரவன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர்  ஐ. ராஜா, ஆதிசேடன், மாவட்ட கவுன்சிலர் ரெட் காசி, செல்லம்பட்டி ஊராட்சி மன்ற துணை தலைவர் மணிகண்டன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

உசிலம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகள் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அக்கட்சி நிர்வாகிகள் விருப்ப மனு அளித்தனர். 

இந்நிகழ்ச்சியில் மாநில நிர்வாகி வடிவேலு, நகரச் செயலாளர் ஆட்சி ராஜா, சௌந்தரபாண்டியன், மாவட்டத் தலைவர் ஆர். பாண்டி மற்றும் கட்சி நிர்வாகிகள்  கலந்து கொண்டனர். 

பின்னர் கட்சி நிர்வாகிகளுடன் பி.வி. கதிரவன் பேசுகையில், உசிலம்பட்டி நகர்புற தேர்தலில் 24 வார்டுகளிலும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு 100 சதவீத வெற்றி இலக்கை அடைய வேண்டும் என்று அக்கட்சி நிர்வாகிகளிடம் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com