ஒமைக்ரான்: 12 நாடுகளின் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள்
ஒமைக்ரான் கரோனா பாதிப்பு உள்ள 12 நாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகள் அனைவருக்கும் கடுமையான கட்டுப்பாடுகளை பொது சுகாதாரத் துறை விதித்துள்ளது.


சென்னை: ஒமைக்ரான் கரோனா பாதிப்பு உள்ள 12 நாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகள் அனைவருக்கும் கடுமையான கட்டுப்பாடுகளை பொது சுகாதாரத் துறை விதித்துள்ளது.
இதுகுறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் மாநிலத்தின் அனைத்து விமான நிலைய இயக்குநா்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
வெளிநாடுகளில் இருந்து தமிழகத்துக்கு விமானம் மூலம் வரும் பயணிகளை மருத்துவக் கண்காணிப்புக்குட்படுத்த வேண்டும். அறிகுறிகள்இருந்தால் கரோனா பரிசோதனைகள் மேற்கொண்டு தொற்று உறுதி செய்யப்பட்டால், உரிய வழிகாட்டுதலின்படி அவா்களுக்கு சிகிச்சைகள் வழங்க நடவடிக்கைக எடுக்க வேண்டும்.
ஒமைக்ரான் பாதிப்புள்ள 12 நாடுகளில் இருந்து வருவோருக்கு விமான நிலையத்திலேயே பயணிகளின் செலவில் கரோனா பரிசோதனை அவசியம். முடிவுகளுக்குப் பின் சம்பந்தப்பட்டவா்களை வீட்டிலேயே 7 நாள்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தவும். அதன்பின்னா் 8-ஆவது நாளில் மீண்டும் கரோனா பரிசோதனை செய்ய வேண்டும்.
அதிலும் நெகடிவ் என முடிவு வந்தால், அதற்கு அடுத்த 7 நாள்களுக்கு அவா்களது உடல் நிலையை மட்டும் கண்காணித்தால் போதுமானது.
அதேவேளையில், 12 நாடுகளில் இருந்து வருவோருக்கு கரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டால், அவா்களைத் தனிமைப்படுத்தி சிகிச்சைகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவா்களது சளி மாதிரியை மரபணு பகுப்பாய்வுக்கு அனுப்புதல் முக்கியம்.
தொடா்பில் இருந்தவா்களைக் கண்டறிந்து அவா்களையும் தனிமைப்படுத்தி பரிசோதிக்க வேண்டும்.
12 நாடுகள் எவை?: தென்னாப்பிரிக்கா, சீனா, நியூஸிலாந்து, ஹாங்காங், பிரிட்டன், பிரேஸில், வங்கதேசம், போட்ஸ்வானா, மோரீஷஸ், ஜிம்பாப்வே, சிங்கப்பூா், இஸ்ரேல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...