லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

காரைக்குடியில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு உண்ணாவிரதம்: 15-க்கும் மேற்பட்டோர் கைது

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் தமிழக மக்கள் மன்றத்தினர் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி அலுவலகம் எதிரே வெள்ளிக்கிழமை கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் மேற்கொண்ட 15-க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது

News image
காரைக்குடியில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் மேற்கொண்ட தமிழக மக்கள் மன்றத்தினர்.
Updated On :1 அக்டோபர் 2021, 6:16 am

DIN

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் தமிழக மக்கள் மன்றத்தினர் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி அலுவலகம் எதிரே வெள்ளிக்கிழமை கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் மேற்கொண்ட 15-க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

காரைக்குடியை மாநகராட்சியாகவும், தனி மாவட்டமாகவும் அறிவிக்கவேண்டும், காரைக்குடி புதிய அரசு மருத்துவமனையில் ஐ.சி.யு மற்றும் அவசர சிகிச்சை பிரிவு ஏற்படுத்தியும், பழைய அரசு மருத்துவமனையில் சித்தா, ஹோமியோ, ஆயுர்வேதம், யுனானி என ஆயுஸ் மருத்துவ மனையாக மாற்ற வேண்டும், காரைக்குடி வளர்ச்சிக்கும், வேலை வாய்ப்பிற்கும் ஒதுக்கப்பட்ட சிப்-காட்டினை மீண்டும் கொண்டுவர வேண்டும்,  காரைக்குடி சம்பை ஊற்று பகுதியிலிருந்து கோவிலூர் தனியார் ரசாயண ஆலைக்கு பல லட்சம் லிட்டர் தண்ணீர் கொண்டு செல்வது நிறுத்தப்பட வேண்டும், காரைக்குடியில் 70 ஆண்டு கால சிமெண்ட் சாலையை பழமையான சுற்றுலா சாலையாக அறிவிக்கவேண்டும், சங்கரபதி கோட்டையை சுற்றுலா தலமாக ஆக்க வேண்டும், காரைக்குடி அண்ணாநகர், ஜீவா நகர், கழனிவாசல் ஆகிய பகுதிகளில் பல ஆண்டுகளாக வசித்து வரும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என 7 அம்ச கோரிக்கைகளை அறிவித்து நகர் முழுவதும் சுவரொட்டி ஒட்டி தமிழக மக்கள் மன்ற தலைவர் ச.மீ. ராசகுமார் தலைமையில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். 

இக்கோரிக்கைகளில் அறிவிக்கப்பட்ட காரைக்குடி சிப்காட்டை கொண்டுவர வேண்டும் என்பதை கைவிட வேண்டும் என்று அதிகாரிகள்  கூறியதால் அதற்கு உண்ணாவிரதம் மேற்கொண்டவர்கள் மறுப்பு தெரிவித்தனர்.

அதனால் மக்கள் மன்ற தலைவர் ச.மீ. ராசகுமார், செயலாளர் கேஆர். ஆறுமுகம் மற்றும் நிர்வாகிகள் உள்பட 15-க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.