இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

குறைந்த மின் அழுத்தத்தை போக்க சீர்காழி பகுதியில் புதிய மின்மாற்றிகள் அமைக்கப்படும்: கோட்ட பொறியாளர் தகவல் 

குறைந்த மின் அழுத்தத்தை போக்க சீர்காழி பகுதியில் தொடர்ந்து புதிய மின்மாற்றிகள் அமைக்கப்படும் என கோட்டப் பொறியாளர் சதீஷ் குமார் தெரிவித்தார்.  

News image

சீர்காழி அடுத்த திட்டை ஊராட்சியில் குறைந்த மின் அழுத்தத்தை போக்கும் வகையில் ரூ.7.25 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 63 கேவிஏ புதிய மின்மாற்றியை சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் இயக்கி வைத்தார்.

Updated On :8 அக்டோபர் 2021, 6:15 am

சீர்காழி: குறைந்த மின் அழுத்தத்தை போக்க சீர்காழி பகுதியில் தொடர்ந்து புதிய மின்மாற்றிகள் அமைக்கப்படும் என கோட்டப் பொறியாளர் சதீஷ் குமார் தெரிவித்தார்.  

சீர்காழி அடுத்த திட்டை ஊராட்சியில் குறைந்த மின் அழுத்தத்தை போக்கும் வகையில் ரூ.7.25 லட்சம் மதிப்பீட்டில் 63 கேவிஏ புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த புதிய மின் மாற்றி திறப்பு விழா கோட்டப் பொறியாளர் சதீஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி மன்றத் தலைவர் பெரியசாமி வரவேற்றார். மின்வாரிய உதவி செயற்பொறியாளர்கள் விஜயபாரதி, விஸ்வநாதன் ,உதவி மின் பொறியாளர் முத்துகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் கலந்து கொண்டு புதிய மின்மாற்றியை இயக்கி வைத்தார். 

அப்போது கோட்டப் பொறியாளர் சதீஷ் குமார் கூறுகையில், சீர்காழி பகுதியில் நிலவும் குறைந்த மின் அழுத்தத்தை போக்க தேவையான இடங்களில் புதிய மின்மாற்றிகள் தொடர்ந்து அமைக்கப்படும் என்றார். 

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் விஜயேஸ்வரன், மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் பிரபாகரன், மாவட்ட துணை அமைப்பாளர் முருகன் ,ஊராட்சி செயலர் அன்பரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.