பிறைசூடனின் மறைவு தமிழ்த்திரையுலகுக்குப் பேரிழப்பு: முதல்வர் ஸ்டாலின்
பிறைசூடனின் மறைவு தமிழ்த்திரையுலகுக்குப் பேரிழப்பு என்று முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)

முதல்வா் மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)
பிறைசூடனின் மறைவு தமிழ்த்திரையுலகுக்குப் பேரிழப்பு என்று முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சுட்டுரையில், "நல்ல பாட்டை மட்டுமே எழுதுவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு எழுதிக்கொண்டிருக்கும் என் ஊர்க்காரர் - உடன்பிறப்பு" என தலைவர் கருணாநிதியால் புகழப்பட்டவர்; திருவாரூர் மண்ணிலிருந்து புறப்பட்டுத் திரையிசையில் தனக்கெனத் தனியிடம் பிடித்த கவிஞர் கலைமாமணி பிறைசூடன் மறைவு அதிர்ச்சியளிக்கிறது.
இதையும் படிக்க- பாடலாசிரியர் பிறைசூடன் காலமானார்
பல தலைமுறை இசையமைப்பாளர்களுடன் பணிபுரிந்து காலத்தால் அழியாத ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதிய அவரது மறைவு தமிழ்த்திரையுலகுக்குப் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், இரசிகர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...