ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

கிருஷ்ணகிரியில் மாநில அளவிலான ஹாக்கி போட்டி தொடக்கம்

கிருஷ்ணகிரி மாவட்டம்,  நாகரசம்பட்டியில் நேரு ஹாக்கி குழு மற்றும் அமரர் எஸ் மோகன் நினைவு ஆக்கக்குழு இணைந்து நடத்தும் முப்பத்தி ஐந்தாம் ஆண்டு மாநில அளவிலான ஹாக்கி போட்டி, வெள்ளிக்கிழமை தொடங்கின. 

News image
நாகரசம்பட்டியில் நேரு ஹாக்கி குழு மற்றும் அமரர் எஸ் மோகன் நினைவு ஆக்கக்குழு இணைந்து நடத்தும் முப்பத்தி ஐந்தாம் ஆண்டு மாநில அளவிலான ஹாக்கி போட்டி.
Updated On :8 அக்டோபர் 2021, 7:22 am

DIN


கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம்,  நாகரசம்பட்டியில் நேரு ஹாக்கி குழு மற்றும் அமரர் எஸ் மோகன் நினைவு ஆக்கக்குழு இணைந்து நடத்தும் முப்பத்தி ஐந்தாம் ஆண்டு மாநில அளவிலான ஹாக்கி போட்டி, வெள்ளிக்கிழமை தொடங்கின. 

இந்தப்போட்டியில் தமிழகத்தை சேர்ந்த சென்னை, சேலம், தஞ்சாவூர்,விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, கோவில்பட்டி, திருநெல்வேலி, மதுரை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 46 அணிகளும், புதுச்சேரி, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நெல்லூர், கேரளம் மாநிலத்தை சேர்ந்த திருச்சூர் மாவட்ட அணி என மொத்தம் 52 அணிகள் பங்கேற்றன.

Story image

    பயிற்சி பெறும் ஹாக்கி விளையாட்டு வீரர்கள். 

3 நாள்கள் நடைபெறும் இந்த போட்டியானது நாக்-அவுட், லீக் முறையில் நடைபெறுகின்றன.

வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக ரூ.40,035, 2-ஆம் பரிசாக ரூ35,035, 3-ஆம் பரிசாக ரூ.30,035, 4-ஆம் பரிசாக ரூ.25,035, 5-ஆம் பரிசாக ரூ.20,035 மற்றும் கோப்பைகள் வழங்கப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.