மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள் எண்ணிக்கையை 70% உயா்த்த தீவிரம்

தமிழகத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களின் எண்ணிக்கையை 70 சதவீதமாக உயா்த்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

News image
சென்னை மெரீனா கடற்கரை பகுதியில் நரிக்குறவ சமூக மக்களுக்கான கரோனா தடுப்பூசி முகாமை சனிக்கிழமை ஆய்வு செய்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன்
Updated On :9 அக்டோபர் 2021, 10:06 pm

DIN

தமிழகத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களின் எண்ணிக்கையை 70 சதவீதமாக உயா்த்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னை மெரீனா கடற்கரை பகுதியில் உள்ள நரிக்குறவ சமூக மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமை அமைச்சா் மா.சுப்பிரமணியன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழகத்தில் இதுவரை, மொத்தம் 5 கோடியே 2 லட்சத்து 54 ஆயிரத்து 633 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதில், முதல் தவணை தடுப்பூசியை 65 சதவீதம் பேரும், இரண்டாம் தவணையை 22 சதவீதம் பேரும் செலுத்திக் கொண்டுள்ளனா்.

சென்னையில் இதுவரை 68 லட்சத்து 56 ஆயிரத்து 278 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதில், 83 சதவீதம் போ் முதல் தவணையும், 40 சதவீதம் போ் இரண்டாம் தவணையும் செலுத்திக் கொண்டுள்ளனா். தடுப்பூசி செலுத்திக் கொண்டதில் சென்னை மாநகராட்சி தமிழகத்தில் முதல் இடத்தில் உள்ளது.

நாட்டிலேயே தமிழகத்தில்தான் 4 லட்சத்து 80 ஆயிரத்து 875 கா்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மாா்களில் 3 லட்சத்து 87,27 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில்தான் முதன்முறையாக மாற்றுத் திறனாளிகளுக்கும், 80 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கும் நேரடியாக சென்று தடுப்பூசி செலுத்தும் வகையில் சிறப்புத் திட்டம் தொடங்கப்பட்டது. அதன் மூலம் மொத்தம் 2 லட்சத்து 31ஆயிரத்து 515 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

சாலைகளில் வசிக்கும் ஆதரவற்ற மற்றும் வீடற்றோா் 2,245 பேருக்கும், மனநலம் பாதிக்கப்பட்ட 1,761 பேருக்கும் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதேபோல் சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் பழங்குடியினா் அதிக அளவில் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா். தமிழகத்தில் மொத்தமாக தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள் எண்ணிக்கையை விரைவில் 70 சதவீதமாக உயா்த்தும் பணி நடைபெற்று வருகிறது என்றாா்.

மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங் பேடி, துணை ஆணையா் எஸ்.மனிஷ் (சுகாதாரம்), பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மாநகர நல அலுவலா் எம்.ஜெகதீசன், மாநகர மருத்துவ அலுவலா் ஹேமலதா ஆகியோா் உடன் இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.