
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, 10 மாவடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, பத்து மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
அதாவது, நீலகிரி, சேலம், கோவை, கிருஷ்ணகிரி, ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், திருச்சி மதுரை, புதுக்கோட்டை ஆகிய பத்து மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யக் கூடும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை: தெற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா, அந்தமான் கடல் ஆகிய பகுதிகளில் 50 கிலோ மீட்டர் வரை காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.