வடுகப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கரோனா தடுப்பூசி விழிப்புணர்வு முகாம்
சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள வடுகப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் கரோனா தடுப்பூசி விழிப்புணர்வு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வடுகப்பட்டி, அக்கமாபேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தடுப்பூசி செலுத்திக்கொள்வதால் ஏற்படும் பயன்கள் குறித்து மக்களிடம் விளக்கி கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தும் மருத்துவக்குழுவினர்.








