அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

ஆயுத பூஜை, விஜயதசமிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வாழ்த்து

விஜயதசமி நன்னாளின் வருகை நம் வாழ்வில் புதிய ஆற்றலின் தொடக்கத்தை அறிவிக்கட்டும் என்று ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டிருக்கும் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்த

News image
ஆயுத பூஜை, விஜயதசமிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வாழ்த்து
Updated On :28 ஜனவரி 2024, 4:22 am

DIN

விஜயதசமி நன்னாளின் வருகை நம் வாழ்வில் புதிய ஆற்றலின் தொடக்கத்தை அறிவிக்கட்டும் என்று ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டிருக்கும் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் வெளியிட்டிருக்கும் வாழ்த்துச் செய்தியில், ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் தமிழக மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

ஆயுதபூஜை பண்டிகை, தீய சக்தியை அழித்த நல்ல சக்தியின் வெற்றியைக் குறிக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஆரவாரத்துடன் கொண்டாடப்படுகிறது. 

நவராத்திரி கொண்டாட்டங்களில் மனித இனத்தைப் பேணிப் பாதுகாக்கும் துர்க்கை அன்னையைப் போற்றிப் பாடுகின்றோம். பத்தாம் நாளில் பகவான் ஸ்ரீராமர் மற்றும் துர்க்கை அன்னையின் வெற்றியை விஜயதசமியாக நாடு முழுவதும் பல்வேறு முறைகளில் கொண்டாடுகின்றோம்.

உண்மை, நன்மை மற்றும் நேர்மை ஆகிய நற்பண்புகளை நாம் நிலைநிறுத்தவும், நம் குடும்பங்களில் என்றும் காணாத வளத்தையும் வளர்ச்சியையும் காணவும் விஜயதசமி நன்னாளின் வருகை நம் வாழ்வில் புதிய ஆற்றலின் தொடக்கத்தை அறிவிக்கட்டும். 

இத்திருவிழா நம் மாநிலத்திலும் நாட்டிலும் அமைதி, நல்லிணக்கம், வளம் மற்றும் நல்ல உடல் நலத்தை நல்கட்டும் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.