முதல்வர் விஜய் கர்நாடகம் வர வேண்டாம்! டி.கே. சிவகுமார் வேண்டுகோள்!காவிரி ஆணைய உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு! டி.கே. சிவகுமார் அறிவிப்பு! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்!மகாராஷ்டிரத்தில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 9 பேர் பலி; மீட்புப் பணிகள் தீவிரம் மஞ்சள், சிவப்பு! தவெக கொடி நிறத்துக்கு மாறிய டிஎன்எஸ்டிசி செயலி!
/

மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2.25 அடி உயர்வு

மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 100 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

News image

மேட்டூர் அணை

Updated On :28 ஜனவரி 2024, 9:52 am IST

காவிரி டெல்டா மாவட்டங்களில் தொடா் மழை எதிரொலியாக, மேட்டூா் அணையிலிருந்து பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 100 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளதால் ஒரே நாளில் மேட்டூர் அணை நீர்மட்டம் 2.25 அடி உயர்ந்துள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை காலை 82.92 அடியிலிருந்து 85.17 அடியாக உயர்ந்தது. 

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 19,068 கன அடியிலிருந்து 28,394 கன அடியாக அதிகரித்துள்ளதால் ஒரே நாளில் மேட்டூர் அணை நீர்மட்டம் 2.25 அடி உயர்ந்துள்ளது.

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 1,000 கன அடியிலிருந்து 100 கன அடியாகக் குறைக்கப்பட்டது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 550 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 47.30 டி.எம்.சி ஆக இருந்தது.

பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால்,  ஒரே நாளில் மேட்டூர் அணை நீர்மட்டம் 2.25 அடி உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மழையளவு 13.20 மி.மீட்டராக பதிவாகி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.