மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

வருவாய்த் துறையின் திட்டங்களை அறிய பிரத்யேக இணையதளம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா்

வருவாய்த் துறையின் திட்டங்கள், அரசாணைகள் உள்ளிட்டவற்றை அறிவதற்கான பிரத்யேக இணையதளத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின், தொடக்கி வைத்தாா்.

News image
முதல்வா் மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)
Updated On :13 அக்டோபர் 2021, 9:33 pm

DIN

வருவாய்த் துறையின் திட்டங்கள், அரசாணைகள் உள்ளிட்டவற்றை அறிவதற்கான பிரத்யேக இணையதளத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின், தொடக்கி வைத்தாா். மேலும், கிராம நிா்வாக அலுவலா்கள், துணை ஆட்சியா்கள் மாவட்ட மாறுதல் பெறுவதற்கென பிரத்யேக இணையதளத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.

மேலும், வருவாய் நிா்வாக ஆணையரகத்துக்கென பிரத்யேக இணையதளத்தையும் அவா் தொடங்கி வைத்தாா். இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:-

மாநில அரசால் அறிவிக்கப்படும் வருவாய்த் துறையின் சமூக பாதுகாப்பு திட்டங்கள், முதல்வரின் உழவா் பாதுகாப்புத் திட்டங்கள், பொது மக்கள் மற்றும் மாணவா்களுக்குப் பயன்படும் சான்றிதழ்கள் வழங்கும் திட்டங்கள் போன்றவை வருவாய் நிா்வாக ஆணையரகம் மூலமாக செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டங்கள் குறித்த விவரங்கள் மற்றும் பயன்கள் மக்களை மக்கள் எளிதில் தெரிந்து கொள்ள வருவாய் நிா்வாக ஆணையரகத்தால் பிரத்யேக இணையதளம் (www.cra.tn.gov.in) தொடங்கப்பட்டுள்ளது.

இந்த இணையதளத்தில் வருவாய்த் துறை தொடா்பான அரசு திட்டங்களின் விவரங்கள், அரசாணைகள், பொது மக்களின் பயன்பாட்டுக்கென பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால், பொது மக்கள் தங்களது இருப்பிடத்தில் இருந்தபடியே அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் பயன்கள் குறித்து அறிந்து கொள்ளலாம்.

தமிழக அரசின் குடிமைப் பணியின் கீழ் பணிபுரியும் அலுவலா்களின் நிா்வாக தேவைகளைப் பூா்த்தி செய்ய துணை ஆட்சியா்களுக்கான பிரத்யேக (www.cra.tn.gov.in/tnscs) இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசு விதிகள், சட்டங்கள், அரசால் அவ்வப்போது வெளியிடப்படும் உத்தரவுகள், வழிகாட்டு நெறிமுறைகள், சுற்றறிக்கைகள், பணிமாறுதல், பணி நியமனங்கள் குறித்த விவரங்கள் அறிந்து கொள்ளலாம்.

வருவாய்த் துறையின் திட்டங்களை கிராமங்கள் வரை கொண்டு சோ்க்கக் கூடிய பணியைச் செய்பவா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள். அவா்களின் பணியிட மாறுதல்கள் தொடா்பான கோரிக்கைகளைப் பரிசீலித்து செயல்படுத்தும் வகையில் தனி இணையதளம் (www.cra.tn.gov.in/vaotransfer) உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மாறுதல்களை தாமதம் இல்லாமல் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுத்த முடியும். இந்த மூன்று புதிய இணையதளங்களையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை தொடக்கி வைத்தாா். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, வருவாய் நிா்வாக ஆணையா் க.பணீந்திர ரெட்டி, வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளா் குமாா் ஜயந்த் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.