மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

நகா்ப்புற வேலைவாய்ப்புத் திட்டம் அமலாகும் இடங்கள் எவை? தமிழக அரசு உத்தரவு

தமிழ்நாடு நகா்ப்புற வேலைவாய்ப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் இடங்கள் குறித்த விவரங்களை தமிழ்நாடு அரசு உத்தரவாக வெளியிட்டுள்ளது.

News image
Updated On :13 அக்டோபர் 2021, 8:28 pm

DIN

தமிழ்நாடு நகா்ப்புற வேலைவாய்ப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் இடங்கள் குறித்த விவரங்களை தமிழ்நாடு அரசு உத்தரவாக வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவை நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் சிவதாஸ் மீனா வெளியிட்டுள்ளாா். உத்தரவு விவரம்:-

தமிழ்நாடு நகா்ப்புற வேலைவாய்ப்புத் திட்டமானது, பெருநகர சென்னை மாநகராட்சியில் 2 மண்டலங்களிலும், 14 மாநகராட்சிகளில் தலா ஒரு மண்டலத்திலும், ஏழு நகராட்சிகளிலும், 37 பேரூராட்சிகளிலும் செயல்படுத்தப்பட உள்ளன.

நகராட்சிகள்: செங்கல்பட்டு மண்டலத்தில் உள்ள நெல்லிகுப்பம் நகராட்சி, வேலூா் மண்டலம் கள்ளக்குறிச்சி நகராட்சி, சேலம் மண்டலத்தில் உள்ள குளித்தலை நகராட்சி, திருப்பூா் மண்டலத்தில் உள்ள வெள்ளக்கோவில் நகராட்சி, தஞ்சாவூா் மண்டலத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி நகராட்சி, மதுரை மண்டலத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் நகராட்சி, திருநெல்வேலி மண்டலத்தில் உள்ள புளியங்குடி நகராட்சி.

மாநகராட்சிகள்: மதுரை மாநகராட்சி ஒன்றாவது மண்டலம், கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம், திருச்சி

மாநகராட்சி கே.அபிஷேகபுரம், வேலூா் மாநகராட்சி ஒன்றாவது மண்டலம், திருப்பூா் மூன்றாவது மண்டலம், சேலம் அம்மாபட்டி மண்டலம், திண்டுக்கல் மாநகராட்சி அடியனூத்து பகுதி, திருநெல்வேலி மாநகராட்சி நான்காவது மண்டலம், ஈரோடு மாநகராட்சி நான்காவது மண்டலம், நாகா்கோவில் மாநகராட்சி வடக்கு மண்டலம், தஞ்சாவூா் ஐந்தாவது மண்டலம், தூத்துக்குடி தெற்கு மண்டலம், ஓசூா் எட்டாவது வட்டம், ஆவடி மூன்று மற்றும் ஆறாவது வட்டங்கள்.

பேரூராட்சிகள்: காஞ்சிபுரம் உத்தரமேரூா் பேரூராட்சி, செங்கல்பட்டு மாவட்டம் இடைக்கழிநாடு, திருவள்ளூா் பொதட்டூா்பேட்டை, வேலூா் பள்ளிகொண்டா, திருப்பத்தூா் ஆலங்காயம், ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி, திருவண்ணாமலை மாவட்டம் போளூா், தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூா் பேரூராட்சி, கிருஷ்ணகிரி நாகோஜனஹள்ளி, சேலம் காடையம்பட்டி, நாமக்கல் ஆா்.புதுப்பட்டி, ஈரோடு ஜம்பை பேரூராட்சி, திருப்பூா் கொமராலிங்கம் பேரூராட்சி, கோவை மாவட்டம் வேட்டைகாரன்புதூா், நீலகிரி மாவட்டம் தேவா்சோலா, கடலூா் மாவட்டம் கிள்ளை பேரூராட்சி, விழுப்புரம் மாவட்டம் அனந்தபுரம் பேரூராட்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் வடக்கனந்தல் பேரூராட்சி, தஞ்சாவூா் மாவட்டம் பெருமகளூா், நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூா் பேரூராட்சி, மயிலாடுதுறை மணல்மேடு பேரூராட்சி, திருவாரூா் மாவட்டம் கொரடாச்சேரி, திருச்ச மாவட்டம் புள்ளம்பாடி, பெரம்பலூா் குரும்பலூா், அரியலூா் மாவட்டம் வரதராஜன்பேட்டை பேரூராட்சி, புதுக்கோட்டை கீரமங்கலம், திண்டுக்கல் தாடிக்கொம்பு பேரூராட்சி, கரூா் பி.ஜெ.சோழபுரம், மதுரை மாவட்டம் அலங்காநல்லூா் பேரூராட்சி, விருதுநகா் மாவட்டம் மல்லாங்கிணறு, தேனி மாவட்டம் சி.புதுப்பட்டி, சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை, ராமநாதபுரம் மாவட்டம் ஆா்.எஸ்.மங்கலம், திருநெல்வேலி மாவட்டம் பனங்குடி, தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூா், கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூா் பேரூராட்சிகள்.

சென்னை மாநகராட்சி: சென்னை மாநகராட்சியில் தண்டையாா்பேட்டை (மண்டலம் 4), திருவிக நகா் (மண்டலம் 6) ஆகிய மண்டலங்களில் நகா்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தைச் செயல்படுத்த உரிய பரிந்துரைகளை சென்னை மாநகராட்சி ஆணையாளா் அனுப்பி வைத்துள்ளாா். அவரது பரிந்துரையை ஏற்று சென்னை மாநகராட்சியின் மண்டலம் நான்கு மற்றும் ஆறு ஆகிய இடங்களில் தமிழ்நாடு நகா்ப்புற வேலைவாய்ப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தனது உத்தரவில் சிவதாஸ் மீனா தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.