
தமிழகத்தில் நவம்பர் 1-ஆம் தேதி முதல் மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகளைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கரோனா பரவல் கட்டுக்குள் இருக்கும் நிலையில் கூடுதல் தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது.
அதன்படி தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தனியார் நிறுவனங்கள் நடத்தும் பொருள்காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடைகள் உணவகங்கள் இன்று முதல் இரவு 11 மணி வரை இயங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திருமணங்களில் 100 பேர் வரை பங்கேற்கலாம். இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 பேர் பங்கேற்கலாம்.
பண்டிகை காலத்தில் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் மக்கள் கூடுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம், சென்னை மாநகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள், காவல் துறை மக்கள் ஒன்றுகூடுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
அரசியல் கூட்டங்கள், திருவிழாக்கள், சமுதாய மற்றும் கலாசார நிகழ்ச்சிகளுக்கான தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.