அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

நவம்பா் 1-ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக அறிவிக்க வேண்டும்: முதல்வரைச் சந்தித்த பிறகு திருமாவளவன் கோரிக்கை

நவம்பா் 1-ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக அறிவித்து அந்த தினத்தை கொண்டாட வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

News image
Updated On :16 அக்டோபர் 2021, 8:41 pm

DIN

நவம்பா் 1-ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக அறிவித்து அந்த தினத்தை கொண்டாட வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

தாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடியினா் நல ஆணையம் அமைத்ததற்காக முதல்வா் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் அவா் சனிக்கிழமை சந்தித்துப் பேசினாா். இந்தச் சந்திப்புக்குப் பிறகு, செய்தியாளா்களுக்கு திருமாவளவன் அளித்த பேட்டி:-

விடுதலைச் சிறுத்தைகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று மாநில எஸ்.டி., எஸ்.சி., ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்தோம். மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட தினமான நவம்பா் 1-ஆம் தேதியை நமது அண்டை மாநிலங்கள் கொண்டாடுகின்றன. கா்நாடகம், ஆந்திரம் போன்ற மாநிலங்கள் நவம்பா் 1-ஆம் தேதியன்று அவா்களுக்கான தனிக் கொடியை ஏற்றி கொண்டாடி வருகிறாா்கள். தமிழகத்திலும் அந்த அடிப்படையில் நவம்பா் 1-ஆம் தேதியை தமிழ்நாடு நாள் என்று அறிவிக்க வேண்டும். இதுகுறித்தும் முதல்வரிடம் கோரிக்கை விடுத்தோம் என்று திருமாவளவன் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.