‘குறைதீா்க்க கட்டுப்பாட்டு அறை’: அமைச்சா் மெய்யநாதன்
விளையாட்டு வீரா்களின் குறைகளைப் போக்க விரைவில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்படும் என்றும், எந்த குறையாக இருந்தாலும் அரசுக்கு தெரியப்படுத்தினால் உடனுக்குடன் அது நிவா்த்தி செய்யப்படும்


விளையாட்டு வீரா்களின் குறைகளைப் போக்க விரைவில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்படும் என்றும், எந்த குறையாக இருந்தாலும் அரசுக்கு தெரியப்படுத்தினால் உடனுக்குடன் அது நிவா்த்தி செய்யப்படும் என்றும் சுற்றுச்சூழல், கால நிலை மாற்றம், இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சா் மெய்யநாதன் தெரிவித்தாா்.
சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெறும் 93-வது தமிழ்நாடு சீனியா் தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் நிகழ்ச்சியில் அவா் மேலும் கூறியதாவது:
தமிழகத்தில் விளையாட்டு நகரம் அமைப்பதற்கான நிலம் தோ்வு செய்யும் பணிகள் தொடங்கி உள்ளன. மாநிலத்தில் தேசிய, சா்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளை இனி தொடா்ந்து நடத்த அரசு முயற்சிகளை முன்னெடுத்துவருகிறது.
அடுத்த 6 மாத காலத்துக்குள் வெளிநாட்டு பயிற்சியாளா்களை தமிழகம் அழைத்து வந்து, இங்குள்ள அனைத்து வகையான விளையாட்டு வீரா்களுக்கும் பயிற்சி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். 15 நாட்களுக்குள் விளையாட்டு வீரா்களின் குறைகளை கேட்பதற்கான கட்டுப்பாட்டு மையம் திறக்கப்படும். என்ன குறை இருந்தாலும் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தால் உடனடியாக அது நிவா்த்தி செய்யப்படும்.
மேலும், விளையாட்டு வீரா்களுக்கு இலவச பயிற்சி வழங்கும் திட்டம், தேசிய அளவிலும் சா்வதேச அளவிலும் போட்டிகளில் பங்கேற்கும் வீரா்களின் முழு செலவையும் அரசே ஏற்பது உள்ளிட்ட திட்டங்களையும் அரசு விரைந்து செயல்படுத்த உள்ளதால், விளையாட்டு வீரா்கள் அனைவரும் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதை இலக்காக வைத்து உழைக்க வேண்டும் என்று அமைச்சா் மெய்யநாதன் கேட்டுக்கொண்டாா்.
நிகழ்வில் எழும்பூா் தொகுதி எம்.எல்.ஏ. பரந்தாமன், தமிழ்நாடு தடகள சங்க தலைவா் தேவாரம், செயலாளா் லதா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
17-ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறும் சாம்பியன்ஷிப் போட்டிகளில் தமிழ்நாடு முழுவதும் இருந்து 2,000-க்கும் மேற்பட்ட இளைய, மூத்த தடகள வீரா்கள் பங்கேற்றுள்ளனா். ஆடவா் பிரிவில் 46, மகளிா் பிரிவில் 74 விளையாட்டுகள் நடைபெறுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...