10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள ஆயுள் தண்டனைக் கைதிகள் விரைவில் விடுதலை: அமைச்சர்
10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள ஆயுள் தண்டனைக் கைதிகள் முதல்வர் அறிவித்தபடி விரைவில் விடுவிக்கப்படுவர் என தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.


திருச்சி: 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள ஆயுள் தண்டனைக் கைதிகள் முதல்வர் அறிவித்தபடி விரைவில் விடுவிக்கப்படுவர் என தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
திருச்சி, மத்திய சிறைச்சாலையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் மேலும் கூறியதாவது:
திருச்சி மத்திய சிறையில் தண்டனை பெற்ற சிறைவாசிகள் 1,517 உள்ளனர் . இந்தியாவிலேயே ஐ.டி.ஐ. தொழிற்பயிற்சி இரு சிறைச்சாலைகளில் மட்டும்தான் உள்ளது. ஒன்று ராஜஸ்தானின் ஜெய்ப்பூர், அடுத்தபடியாக நமது திருச்சி சிறைச்சாலை. அதேபோல் சிறைவாசிகள் 10,12 போன்ற வகுப்புகள் தேர்வெழுதவும் அனுமதிக்கப்படுவதுடன் அவற்றுக்கான பயிற்சி மற்றும் வசதிகளும் செய்து தரப்படுகின்றன.
சிறைக் கைதிகள் பாதுகாப்பில் அக்கறை உள்ள அரசாக திமுக அரசு உள்ளது. திருச்சி சிறப்பு முகாமில் தண்டனைக் காலம் முடிந்தவர்களை வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்களுக்கு பாஸ்போர்ட் இருக்காது. மேலும் விசா உள்ளிட்ட பயண ஆவணங்கள் தொடர்புடைய பிரச்னைகளால் உடன் அவர்கள் தாயகம் அனுப்ப இயலாமல் இருக்கலாம். எனவே தான் அவர்களை சிறப்பு முகாமிலேயே வைக்கப்பட்டுள்ளனர்.

கூடுதல் நேரம் பணி செய்யும் சிறைக் காவலர்களுக்கான படியை 200 ரூபாயிலிருந்து உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். 10 ஆண்டுகள் ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ளவர்களை அண்ணா பிறந்தநாளை ஒட்டி விடுவிக்கப்படும் என தமிழக முதலமைச்சர் அறிவித்திருந்தார். அதில் சிக்கல் ஏதுமில்லை குறிப்பிட்டபடி விடுவிக்கப்படுவர். ஆனால், அவ்வாறு அடைபட்டுள்ளவர்களில் வெடிகுண்டு வழக்கு,தேச துரோக வழக்கு போன்ற கொடுங்குற்றத்தில் ஈடுபட்டவர்களை விடுவிக்க முடியாது. அவர்களை விடுவிப்பதில் பல்வேறு நிபந்தனைகள் உள்ளது. யார் யாரை விடுதலை செய்யலாம் என்கிற பட்டியலை தயார் செய்து வருகிறோம். பட்டியல் தயாரிப்பு பணி முடிய இன்னும் 20 நாட்கள் ஆகலாம்.
ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதில் முதலமைச்சர் உறுதியாக இருக்கிறார். அதை அவரது லட்சியமாக வைத்துள்ளார். அவர்களை விடுதலை செய்ய அரசு முழு முயற்சி எடுக்கும். ஏழு பேரில் ரவிச்சந்திரன் என்பவரது தாயார் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு பரோல் வழங்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலினிடம் கலந்து பேசி பரிசீலனை செய்யப்படும். சிறையில் உள்ள கைதிகளுக்கு முழுமையான மருத்துவச் சிகிச்சைகள் கொடுக்கப்பட்டு வருகிறது. மருத்துவ வசதி மறுக்கப்படுவதில்லை, நல்ல சிகிச்சை வழங்கப்படுகிறது என்றார்.
இந்த ஆய்வின்போது தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...