கூட்டுறவு சங்கங்களில் பயிர்க் கடன் வசூல் முற்றிலும் தற்காலிக நிறுத்தம்: தமிழ்நாடு அரசுசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 800 குறைந்தது!இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் தவெக முதன்முறையாக பங்கேற்புமதுராந்தகம், தாராபுரத்தில் நாளையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவுகச்சா எண்ணெய் கையிருப்பை வெளியிட ஜி7 நாடுகள் முடிவு!ஆசிய விளையாட்டு: தங்கம் வென்றார் இந்திய வில்வித்தை வீராங்கனை மொஹோத்!

வேப்பனப்பள்ளி அருகே  தங்க நகைக்காக மூதாட்டி கொலை

வேப்பனப்பள்ளி அருகே வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியைக் கொன்று தங்க நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை கவலர்கள் தேடி வருகின்றனர்.

வேப்பனப்பள்ளி அருகே  தங்க நகைக்காக மூதாட்டி கொலை

Published On :


கிருஷ்ணகிரி: வேப்பனப்பள்ளி அருகே வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியைக் கொன்று தங்க நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை கவலர்கள் தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ளது நெடுமருதி கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த  மூதாட்டி சூடம்மா (60). இவர் தனது வீட்டின் வெளியே தூங்குவது வழக்கம். 

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை, சூடம்மா சடலமாகக் கிடப்பதைக் கண்ட அந்தக் கிராம மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் போரில் நிகழ்விடத்திற்கு சென்ற காவலர்கள், மேற்கொண்ட விசாரணையில், மர்ம நபர்கள் சூடம்மாவை கொன்று, அவர் அணிந்திருந்த 4 பவுன் தங்க நகைகளை  கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து காவலர்கள் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். தங்க நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தக் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.