பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

தமிழகத்தில் இன்று மேலும் 1,164 பேருக்கு கரோனா

தமிழகத்தில் இன்று மேலும் 1,164 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

News image
Updated On :21 அக்டோபர் 2021, 2:11 pm

DIN

தமிழகத்தில் இன்று மேலும் 1,164 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,164 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக சென்னையில் 152 பேருக்கும், கோவையில் 137 பேருக்கும், செங்கல்பட்டில் 98 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 26 லட்சத்து 91,797-ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே, நோய்த் தொற்றிலிருந்து இன்று 1,412 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 

இதையடுத்து மாநிலத்தில் இதுவரை கரோனாவிலிருந்து விடுபட்டோரின் எண்ணிக்கை 26.42 லட்சத்தைக் கடந்துள்ளது. மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல்படி மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 13,790 போ் உள்ளனா். 
மற்றொருபுறம், தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 20 போ் பலியானதை அடுத்து மாநிலம் முழுவதும் இதுவரை நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,968-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.