கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பருவமழை: ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

News image

பருவமழை: ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

Updated On :26 அக்டோபர் 2021, 7:47 am


சென்னை: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியிருக்கும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு காணொலி வாயிலாக நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பருவமழையை முன்னிட்டு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மக்கள் பாதுகாப்பு,  சுகாதாரம் மற்றும் பல பணிகள் குறித்து முதல்வர் ஆலோசனை நடத்துகிறார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர்களுடன் பல துறை அமைச்சர்களும், அரசுத் துறை செயலாளர்கள், உயரதிகாரிகளும் பங்கேற்கின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.