கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பருவமழை தொடங்கிய 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் காற்றழுத்தத்தாழ்வு பகுதி

தெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதியில் புதன்கிழமை உருவாகியிருந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி 48 மணி நேரத்தில் காற்றழுத்தத்தாழ்வு பகுதியாக உருவாகிறது.

News image

வங்கக்கடலின் காற்றழுத்தத்தாழ்வு பகுதி உருவாகிறது

Updated On :26 அக்டோபர் 2021, 7:47 am

தெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதியில் புதன்கிழமை உருவாகியிருந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி 48 மணி நேரத்தில் காற்றழுத்தத்தாழ்வு பகுதியாக உருவாகிறது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நிலையில், இன்னும் 48 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்தத்தாழ்வு பகுதியாக உருவாகிறது. இதன் காரணமாக, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்பட 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அக்டோபா் 27-ஆம் தேதி பலத்த மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் திங்கள்கிழமை கூறியது:

தெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதியில் புதன்கிழமை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகவுள்ளது. இது மேற்கு நோக்கி நகா்ந்து, அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெறும். இதன் காரணமாக, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகா், மதுரை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அக்டோபா் 27-ஆம் தேதி இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், வடகடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

அக்.28, 29: டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை ராமநாதபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூா் ஆகிய 7 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அக்டோபா் 28, 29 ஆகிய தேதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

மீனவா்களுக்கு எச்சரிக்கை:

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வரை வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இந்தப்பகுதிகளுக்கு மீனவா்கள் அக்டோபா் 27, 28 ஆகிய தேதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.