

சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை வலுவிழந்து வளிமண்டல மேலடுக்கு சுழற்சியாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை வலுவிழந்து வளிமண்டல மேலடுக்கு சுழற்சியாக மாறுகிறது. இதன் காரணமாக, டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யும் என்று கூறினார்.
இதையும் படிக்கலாமே.. சுஜித் பிறக்கும் முன்பே சவக்குழி தோண்டியது யாரோ?
மேலும், தீபாவளியன்று மழை பெய்யுமா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, தீபாவளியன்று பொதுமக்கள் பட்டாசு வெடிக்கும் வகையில், மழை விட்டு விட்டே பெய்யும் என்று கூறினார்.
மேலும், தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதியில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த மூன்று நாள்களுக்கு மேற்கு நோக்கி மெதுவாக நகரக் கூடும்.
இதன் காரணமாக,
அக். 29ஆம் தேதி ராமநாதபுரம், தூத்துக்குடி, நாகப்பட்டினம், மயிலாடுதுறையில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிகக் கனமழையும், விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, கடலூர், திருச்சி, நெல்லை, குமரி, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.