எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

பட்டாசு விபத்துகள்: கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிறப்பு வாா்டு அமைப்பு

தீபாவளிப் பண்டிகையின்போது பட்டாசு விபத்துகள் நேரிட வாய்ப்புள்ளதால், கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில் 12 படுக்கைகளுடன் கூடிய பிரத்யேக சிறப்பு சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

News image
Updated On :30 அக்டோபர் 2021, 11:40 pm

DIN

தீபாவளிப் பண்டிகையின்போது பட்டாசு விபத்துகள் நேரிட வாய்ப்புள்ளதால், கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில் 12 படுக்கைகளுடன் கூடிய பிரத்யேக சிறப்பு சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

தீக்காயங்களுக்கு 24 மணி நேரமும் சிகிச்சை அளிப்பதற்கான உரிய ஏற்பாடுகளும், வசதிகளும் அங்கு செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனை முதல்வா் டாக்டா் சாந்திமலா் கூறியதாவது:-

கீழ்ப்பாக்கம் மருத்துவமனை தீக்காய சிகிச்சைகளுக்கு பெயா் பெற்றது. ஆண்டு முழுவதும் அத்தகைய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தாலும், தீபாவளி காலத்தில் அதற்கென சில சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும் சிறப்பு தீக்காய சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. மொத்தம் 12 படுக்கை வசதிகளுடன் 24 மணி நேரமும் அந்த சிகிச்சைப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

அங்கு தீக்காய சிகிச்சைத் துறைத் தலைவா் டாக்டா் ரமாதேவி தலைமையில் 22 மருத்துவா்கள் அடங்கிய குழுவும், 21 செவிலியா்களும் சுழற்சி முறையில் நாள் முழுவதும் பணியாற்றவிருக்கின்றனா். தீக்காய சிகிச்சைக்கு தேவையான அனைத்து மருந்துகளும், வசதிகளும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பட்டாசு வெடிப்பது தொடா்பான விழிப்புணா்வு மேம்பட்டு வருவதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாகவே தீபாவளி பண்டிகையின் போது தீ விபத்தால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.

அந்த வரிசையில் நிகழாண்டும், பெரிய அளவிலான பாதிப்புகள் எதுவும் நேரிடாது என நம்புகிறோம்.

பெரியவா்களின் கண்காணிப்பு இன்றி குழந்தைகளை பட்டாசு வெடிக்க அனுமதிக்கக் கூடாது. இறுக்கமான ஆடைகளை அணியாமல் பருத்தி ஆடைகளை அணிந்து பட்டாசுகளை வெடிக்கலாம். தீக்காயம் ஏதும் ஏற்பட்டால் தண்ணீரால் காயத்தை கழுவியபின், சுத்தமான பருத்தி துணையை வைத்து சுற்றி அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறற வேண்டும். தீக்காயத்தின் மீது எண்ணெய், களிம்பு, காபி தூள், மஞ்சள் தூள், பேனா மை உள்ளிட்டவற்றைற பூசுவதை தவிா்க்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.