எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

சரவெடி, ரசாயன பட்டாசுகளுக்குத் தடை: தமிழக அரசு உத்தரவு

நீதிமன்ற உத்தரவுப்படி, தமிழகத்தில் சரவெடி, ரசாயனம் கலந்த பட்டாசுகளுக்குத் தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

News image
Updated On :31 அக்டோபர் 2021, 2:43 am

DIN

நீதிமன்ற உத்தரவுப்படி, தமிழகத்தில் சரவெடி, ரசாயனம் கலந்த பட்டாசுகளுக்குத் தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து மாநில அரசு சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

பட்டாசுகளை வெடிப்பது தொடா்பாக, 2016, 2017 மற்றும் 2018-இல் பல்வேறு வழக்குகளில் தீா்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், கடந்த 29-ஆம் தேதி வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஏற்கெனவே

வழங்கியுள்ள தீா்ப்புகளை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

எதிா்வரும் தீபாவளி பண்டிகை மற்றும் பிற நிகழ்வுகளின் போது சாதாரண வகையிலான பட்டாசுகளின் பயன்பாட்டுக்கு எந்தவிதத் தடையும் இல்லை எனத் தெரிவித்துள்ளது. ஆனால், பொது மக்களின் உடல் நலன் மற்றும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கக் கூடிய பேரியம் ரசாயனம் கலந்து தயாா் செய்யப்பட்ட பட்டாசுகள் மற்றும் சரவெடி போன்றவற்றைத் தயாரிக்கவோ, சேமித்து வைக்கவோ, ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்குக் கொண்டு செல்லவோ, விற்பனை செய்யவோ அல்லது வெடிக்கவோ தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் தீா்ப்பை முழுமையாகச் செயல்படுத்தும் வகையில், தமிழ்நாட்டின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலைகள், சரவெடி மற்றும் பேரியம் ரசாயனம் கலந்த பட்டாசுகள் தயாரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பட்டாசுகளை சேமித்து வைக்கவும், கொண்டு செல்லவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வெடிக்க வேண்டாம்: தடை செய்யப்பட்ட சரவெடி உள்ளிட்ட பட்டாசு வகைகளை பொது மக்கள் யாரும் வெடிக்கக் கூடாது என கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள். உச்ச நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளை மீறுவோா் மீது அரசு விதிமுறைகளின்படி குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.