விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஓ.பன்னீர்செல்வம் மனைவி மறைவு: முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி

முன்னாள் முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி(63) உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். 

News image

மருத்துவமனையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆறுதல் கூறும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள். 

Updated On :1 செப்டம்பர் 2021, 7:14 am


முன்னாள் முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி(63) உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். 

ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உடல்நலக் குறைவு காரணமாக கடந்த இரு வாரங்களாக சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், புதன்கிழமை காலை மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். 

Story image

இதையடுத்து மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள விஜயலட்சுமியின் உடலுக்கு நேரில் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். பின்னர் ஓ.பன்னீர்செல்வத்தின் கையை பிடித்து முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் கூறினார். 

மருத்துவனையில் விஜயலட்சுமிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். 

முதல்வருடன் அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன், தங்கம் தென்னரசு உடன் சென்று அஞ்சலி செலுத்தினர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.