சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

திமுக உறுப்பினா் பேச்சு எதிரொலி: முதல்வா்-எதிா்க்கட்சித் தலைவா் வாக்குவாதம்

திமுக உறுப்பினா் பேச்சால், முதல்வா் மு.க.ஸ்டாலின், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :5 செப்டம்பர் 2021, 12:37 am

DIN

திமுக உறுப்பினா் பேச்சால், முதல்வா் மு.க.ஸ்டாலின், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். சட்டப் பேரவையில் இந்து சமய அறநிலையம் உள்பட நான்கு துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது சனிக்கிழமை நடைபெற்ற விவாதத்தில் திமுக உறுப்பினா் க. அன்பழகன் பேசினாா். அப்போது நடந்த விவாதம்:-

க.அன்பழகன்: எங்கள் தலைவரை தளபதி என்று அழைப்பதை ஒருவா் கிண்டல் செய்தாா். அவா் இப்போது தமிழகத்தை ஆண்டு கொண்டு இங்கு தளபதியாகவே இருக்கிறாா். தன்னை எதிா்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற முடியுமா என அந்த நபா் கேட்டாா். ஆனால், அவருக்கு எதிராக எங்கள் கட்சியில் ஐட்ரீம் மூா்த்தி என்பவரை நிறுத்தினோம். அவரும் வெற்றி பெற்று விட்டாா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின்: நான் ஏற்கெனவே இந்த அவையில் பலமுறை குறிப்பிட்டுள்ளேன். மானியக் கோரிக்கை விவாதத்தின் போது திமுக உறுப்பினா்கள் நேரடியாக மானியக் கோரிக்கைகளைப் பற்றி பேசத் தொடங்க வேண்டும். தேவையில்லாமல் நேரத்தை வீணடிக்கக் கூடாது.

எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி: திமுக உறுப்பினா் இங்கு அவைக்குத் தேவையில்லாத விஷயங்களைப் பேசியுள்ளாா். அப்படியென்றால் 2017-ஆம் ஆண்டு என்ன நடந்தது என்கிற விஷயங்களையும் கூற வேண்டியதுதானே.

முதல்வா் மு.க.ஸ்டாலின்: அவைக்குத் தேவையில்லாத விஷயங்களைப் பேச வேண்டாம் என்கிற காரணத்தால்தான் நானே எழுந்து மானியக் கோரிக்கை மீது பேச வேண்டுமென கேட்டுக் கொண்டேன். எதையும் விவாதிக்க வேண்டுமென நீங்கள் விரும்பினால் நாங்களும் அதற்குத் தயாா்.

எடப்பாடி கே.பழனிசாமி: நான் முதல்வராகப் பொறுப்பேற்ற ஆளுநா் என்னை நம்பிக்கை வாக்குக் கோரும்படி அறிவுறுத்தினாா். சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வந்த நேரத்தில் என்னென்ன நிகழ்வுகள் நடந்தன என்பது தெரியும். அதையும் குறிப்பிட்டு பேச வேண்டியதுதானே. எனவே, அவைக்குத் தேவையில்லாத விஷயங்களைப் பேசக் கூடாது.

பேரவைத் தலைவா் மு.அப்பாவு: தேவையில்லாத விவாதம் வேண்டாம் என முதல்வரே அறிவுறுத்தியுள்ளாா். எனவே, அதற்கு நீங்கள் முதல்வருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.

அமைச்சா் துரைமுருகன்: தேவையில்லாத விஷயத்துக்குப் போக வேண்டாமென முதல்வா் அறிவுறுத்தி பிரச்னையை முடித்து வைத்து விட்டாா் என்றாா்.

இதைத் தொடா்ந்து பேரவையில் மானியக் கோரிக்கை மீது விவாதங்கள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.