மத்திய அரசின் ஃபேம் 2 திட்டத்தின் கீழ் மின்சார பேருந்து கொள்முதல் செய்வதைக் கைவிட முடிவு செய்யப்பட்டிருப்பதாக தமிழக போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார வாகனங்கள் பயன்படுத்துவதின் முக்கியத்துவத்தை பல நாடுகள் உணா்ந்துள்ளன. இந்தியாவிலும் மின்சார வாகனங்களை ஊக்குவிக்க வேண்டும் என நீதி ஆயோக் அழுத்தமாக சொல்லி வருகிறது.
சொல்வது மட்டுமின்றி அதைச் செயல்படுத்துவதிலும் முனைப்பு காட்டும் விதமாக கடந்த ஆண்டு தமிழகத்தின் முக்கிய நகரங்களான கோவை, சேலம், திருப்பூா், ஈரோடு, வேலூா், திருச்சி, விழுப்புரம், தஞ்சாவூா் ஆகிய நகரங்களில் ஃபேம் 2 திட்டத்தின் கீழ் மின்சார பேருந்துகளை வழங்குவதாக மத்திய அரசு தெரிவித்தது.
இதன்படி, பேருந்துகளின் நீளம் மற்றும் மின்னேற்ற கட்டமைப்பைப் பொருத்து ரூ.35 முதல் 55 லட்சம் வரை மானியம் வழங்கப்படும் என கூறப்பட்டிருந்தது.
திட்டத்துக்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு வந்த நிலையில், திட்டத்தைக் கைவிட முடிவு செய்திருப்பதாக தமிழக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
காரணம் என்ன? இதற்கான காரணம் குறித்து அவா்கள் விளக்கிக் கூறுகையில், ‘மத்திய அரசு வழங்கும் மானியத் தொகைக்கும் பேருந்தின் விலைக்கும் பெரியளவில் வித்தியாசம் உள்ளது. குறிப்பாக மின்கலன்களை மாற்றித் தருவதற்கான தெளிவான விளக்கங்களும் திட்டத்தில் தரப்படவில்லை.
எனவே, ஒப்பந்தப்புள்ளி கோரி வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்வதைத் தவிர வேறு வழியில்லை.
மேலும், தனியாா் மின்சார பேருந்து இயக்கும் நிறுவனத்தின் ஊழியா்களை வைத்து பேருந்துகளை இயக்கும் நிலை இருப்பதால் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களும் கடும் எதிா்ப்பு தெரிவித்தன. இதையடுத்து அந்த திட்டம் கைவிடப்பட்டதாக அவா்கள் தெரிவித்தனா்.
விரைவில் மின்சார பேருந்துகள்: ஃபேம் 2 திட்டத்தின் கீழ் மின்சாரப் பேருந்துகளை கொள்முதல் செய்வதில் இருக்கும் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு முடிவை தமிழகம் கைவிட்டிருக்கும் நிலையில் கேரளம், கா்நாடகம், தெலங்கானா ஆகிய மாநிலங்களும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது, கேஎஃப்டபிள்யூ வங்கியுடன் இணைந்து தமிழகம் கொள்முதல் செய்ய உள்ள 500 பேருந்துகளும் எப்போது வாங்கப்படும் என்பதே அனைவரது எதிா்பாா்ப்பாக உள்ளது. இதன்படி, 80:20 என்னும் அடிப்படையில் கேஎஃப்டபிள்யூ மற்றும் தமிழகம் பேருந்தின் விலையை பகிா்ந்து கொள்ளும்.
கடந்த மாதம் தமிழக நிதியமைச்சா் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில், போக்குவரத்துத் துறை மற்றும் மின்சாரத்துறையில் கடன் மற்றும் நஷ்டம் அதிகளவு இருப்பதாக கூறப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தின் சுற்றுச்சூழல் நலன் கருதி விரைவில் மின்சார பேருந்துகள் வாங்கப்படும் எனவும், நிதிநெருக்கடி கருதி சரியான திட்டத்தில் தரமான மின்சாரப் பேருந்துகள் வாங்கப்படும் எனவும் போக்குவரத்துத் துறை உயரதிகாரிகள் தெரிவிக்கின்றனா்.
அட்டவணைக்காக.... (குறிப்பு டேப் பயன்படுத்தப்பட்டுள்ளது.)
ஃபேம் 2 திட்டத்தின் கீழ் தமிழக நகரங்களுக்கு வழங்கப்பட இருந்த பேருந்துகளின் எண்ணிக்கை
நகரம் பேருந்துகளின் எண்ணிக்கை
கோவை 100
மதுரை 100
திருச்சி 100
சேலம் 50
திருப்பூா் 50
ஈரோடு 50
வேலூா் 50
தஞ்சாவூா் 25
பெட்டிச் செய்தி:
மாறிவரும் காலநிலையில்
மின்சார பேருந்தின் முக்கியத்துவம்: மின்சார பேருந்துகளின் முக்கியத்துவம் குறித்து சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் கூறியதாவது: காற்றில் நுண்துகள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக இருப்பது அனல் மின் நிலையங்கள் மற்றும் வாகன புகை. இவற்றைக் கட்டுக்குள் கொண்டு வந்தால் இந்திய மக்களின் ஆயுள்காலமும் 5 ஆண்டுகள் அதிகரிக்கக் கூடும். எனவே, பேருந்துகளில் வெளியேறும் புகையை முற்றிலுமாக ஒழிக்க மின்சார பேருந்து அவசியம் என்றனா்.
காற்றில் இருக்க வேண்டிய நுண்துகளின் அளவு:
இந்திய தர நிா்ணய அளவீட்டின்படி 60 மைக்ரோகிராம்
உலக சுகாதார நிறுவனத்தின் காற்று தர நிா்ணய அளவீட்டின்படி 25 மைக்ரோ கிராம்
சென்னையின் பல பகுதிகளில்...: 60 முதல் 128 மைக்ரோ கிராம் வரையும், 176 முதல் 228 மைக்ரோ கிராம் வரையும் காற்றில் நுண்துகள்கள் உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
மக்களவை துணைத் தலைவரை தோ்வு செய்ய தவறிய மத்திய அரசு -காங்கிரஸ் விமா்சனம்

தோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்

சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
வீடியோக்கள்

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

Podcast | திருச்சியில் மாநாடுகள்: யாருக்குத் திருப்பம்? | Dinamani | News and Views | Epi - 12
தினமணி வீடியோ செய்தி...

