காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 16,670 கன அடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரளம் மாநிலத்தில் கபினியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இதனால் கபினி கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து வெகுவாக அதிகரித்துள்ளது. இரு அணைகளில் இருந்தும் காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் வெள்ளிக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 13,670 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து சனிக்கிழமை காலை வினாடிக்கு 16,670 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 5,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் வெள்ளிக்கிழமை காலை 68.55 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் சனிக்கிழமை காலை 69.39 அடியாக உயர்ந்துள்ளது.
அணையிலிருந்து கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 650 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 32.18 டி.எம்.சி.யாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill

பணப்பட்டுவாடா புகாா்: பாஜக, அதிமுக நிா்வாகிகளிடம் போலீஸாா் விசாரணை

ஈரான் போர்: 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தைக்குத் தயாராகி வரும் பாகிஸ்தான்!

பிரமிக்கத்தக்கக் கூடிய கேட்ச்..! தன்னையே பாராட்டிக்கொண்ட ஸ்ரேயாஷ்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


