தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

வேதாரண்யம் அருகே ஒரே கிராமத்தில் 20 பேருக்கு கரோனா: 40 பேர் மருத்துவமனையில் அனுமதி

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த பஞ்சநதிக்குளம் மேற்கு ஊராட்சியில் மட்டும் ஞாயிற்றுக்கிழமை (செப்.5) ஒரே நாளில் 20 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

News image

பஞ்சநதிக்குளம் மேற்கு ஊராட்சியில் ஆய்வு செய்த ஆட்சியர் அ.அருண் தம்புராஜ்.

Updated On :5 செப்டம்பர் 2021, 6:34 am

DIN

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த பஞ்சநதிக்குளம் மேற்கு ஊராட்சியில் மட்டும் ஞாயிற்றுக்கிழமை (செப்.5) ஒரே நாளில் 20 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் அரசு மருத்துமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.

இதையடுத்து பஞ்சநதிக்குளம் கிராமத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர் அ.அருண் தம்புராஜ் நோய்த்தொற்று தடுப்பு பணிகளை ஆய்வு செய்தார்.

Story image

பொது வழிகள் மூடப்பட்டுள்ளது. ஊராட்சித் தலைவர் மணிமேகலை பாண்டியன் தலைமையில் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பஞ்சநதிக்குளம் உள்பட சுற்றுப் பகுதியைச் சேர்ந்த 40 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.