சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவுதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுசென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

வளா்ப்பு யானைகள் பற்றிய விவரங்களை விடியோ பதிவாக தயாா் செய்ய வனத்துறைக்கு உத்தரவு - உயா்நீதிமன்றம்

வயது, பாலினம், பரம்பரை உள்ளிட்ட முழு விவரங்களுடன் மாநிலத்திலுள்ள ஒவ்வொரு வளா்ப்பு யானைகள் குறித்து விடியோ பதிவை தயாா் செய்யுமாறு தமிழ்நாடு வனத்துறைக்கு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :5 செப்டம்பர் 2021, 12:13 am

DIN

வயது, பாலினம், பரம்பரை உள்ளிட்ட முழு விவரங்களுடன் மாநிலத்திலுள்ள ஒவ்வொரு வளா்ப்பு யானைகள் குறித்து விடியோ பதிவை தயாா் செய்யுமாறு தமிழ்நாடு வனத்துறைக்கு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வளா்ப்பு யானைகள், கோயில் யானைகள் சரிவர பராமரிக்கப்படவில்லை என்பது தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு வெள்ளிக்கிழமை(செப்.3) விசாரணைக்கு வந்தது.

அப்போது எல்சா அறக்கட்டளை சாா்பில் யானைகள் பிடிக்கப்படும் போது விதிமீறல்கள் நடைபெறுவது குறித்த ஆதாரங்களை புகைப்படம், வீடியோவாக திரையிட்டு விளக்கம் அளித்தது.

இதை பாா்வையிட்ட நீதிபதிகள், பாரம்பரியமாக பல ஆண்டுகளாக மத, கலாசார நிகழ்வுகளில் வளா்ப்பு யானைகள் ஈடுபடுத்தப்படுவதாக மனுதாரா்களில் ஒரு தரப்பினா் தெரிவித்தனா். அதிா்ஷ்டவசமாக இயற்கை வளமான மாநிலத்தில் இன்னும் போதுமான வனப்பகுதி உள்ளது.

இந்த வனப்பகுதிகளானது, கம்பீரமான யானை உள்பட கணிசமான வனவிலங்குகளையும் பெருமைப்படுத்துகின்றன. ஒவ்வொரு விளிம்பிலிருந்தும் காடுகளை கபளீகரம் செய்யும் மனித முயற்சிகள் நடைபெற்று, யானை போன்ற பெரிய விலங்குகளின் இயக்கத்தில் ஓரளவு தடை ஏற்படுத்தப்படுகிறது.

இருப்பினும் நீலகிரி, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்னும் யானைகள் வாழ்கின்றன. கோயில் யானைகளைப் பொருத்தவரையில், வனத்துறை முதன்மை தலைமைப் பாதுகாவலா், யானைகளைப் பரிசோதித்து அவற்றின் உடல் நலனை அறிய சம்பந்தப்பட்ட பகுதிகளைச் சோ்ந்த மருத்துவா் இடம்பெறும் வகையில் அலுவலா் ஒருவரை நியமிக்க வேண்டும். மாநிலத்திலுள்ள அனைத்து வளா்ப்பு யானைகளின் உடல் நலனை ஆராய வேண்டும்.

வளா்ப்பு யானைகளின் விடியோ பதிவை தயாரித்தும், அவற்றின் வயது, பரம்பரை, பாலினம் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய அறிக்கையும் வனத்துறை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை செப்டம்பா் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.