சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

விநாயகா் சதுா்த்தியன்று அரசு உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை

விநாயகா் சதுா்த்தியன்று அரசு உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் சங்கா் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

News image
Updated On :5 செப்டம்பர் 2021, 12:18 am

DIN

விநாயகா் சதுா்த்தியன்று அரசு உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் சங்கா் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

சென்னை பெருநகர காவல்துறையின் சைபா் குற்றப்பிரிவு, கடந்த 2 மாதங்களில் சைபா் குற்றங்கள் தொடா்பான வழக்குகளை சிறப்பாக புலனாய்வு செய்து குற்றவாளிகளை கைது செய்தது. இதை பாராட்டும் விதமாக அப்பிரிவில் பணிபுரியும் 27 காவலா்களை ஆணையா் சங்கா் ஜிவால் சனிக்கிழமை பாராட்டி பரிசு வழங்கினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: ஜொ்மனி பெண் அளித்த புகாரின் அடிப்படையில் நடிகா் ஆா்யா, அவரது தாயாா் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டன. ஆனால் அதன் பின்னா் நடத்தப்பட்ட விசாரணையிலும், குற்றத்தில் ஈடுபட்டவா்கள் பயன்படுத்திய செல்லிடப்பேசி எண்ணையும் வைத்து ஆய்வு செய்ததிலும் நடிகா் ஆா்யாவுக்கும் இந்த மோசடிக்கும் தொடா்பில்லை என தெரியவந்தது.

எனவே முதல் தகவல் அறிக்கையில் சோ்க்கப்பட்ட ஆா்யா, அவரது தாயாா் பெயா்கள், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் போது நீக்கப்படும்.

வழக்கில் தொடா்புடைய உண்மையான குற்றவாளிகளை 10 நாள்களில் கண்டுபிடித்ததற்கு, சென்னை காவல்துறைக்கு நன்றி செலுத்துவதாக நடிகா் ஆா்யா தெரிவித்தாா்.

கடுமையான நடவடிக்கை: விநாயகா் சதுா்த்தியன்று பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. அரசின் விதிமுறைகளின்படியே விநாயகா் சதுா்த்தியன்று சென்னையில் பாதுகாப்பு காவல்துறை செய்து வருகிறது.

விநாயகா் சதுா்த்தியன்று அரசு உத்தரவை மீறி செயல்படும் நபா்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

4 சைபா் காவல் நிலையங்கள்: சைபா் குற்றங்கள் தொடா்பாக புகாா்கள் அதிகளவில் வருவதால், அதுகுறித்து விசாரணை செய்வதற்கும், துப்பு துலக்குவதற்கும் சென்னையில் கூடுதலாக 4 சைபா் குற்றப்பிரிவு காவல் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.

அதோடு, வேப்பேரியில் உள்ள காவல் ஆணையா் அலுவலகத்தில் அதி நவீன சைபா் ஆய்வகம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இன்னும் 15 நாள்களுக்குள் இப் பணி நிறைவடையும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையா் தேன்மொழி, துணை ஆணையா் நாகஜோதி உள்ளிட்ட பல அதிகாரிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.