புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தமிழக சட்டப்பேரவைக்கு 3 நாள்கள் விடுமுறை

வரும் 10,11,12 ஆகிய தேதிகளில் சட்டப்பேரவைக்கு விடுமுறை விடப்படுவதாக பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்துள்ளார்.  

News image
Updated On :6 செப்டம்பர் 2021, 9:14 am

DIN

வரும் 10,11,12 ஆகிய தேதிகளில் சட்டப்பேரவைக்கு விடுமுறை விடப்படுவதாக பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்துள்ளார். 
தமிழகச் சட்டப்பேரவை கூட்டத்தொடா் ஆகஸ்ட் 13-இல் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதோடு தொடங்கியது. அதைத்தொடர்ந்து பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் கடந்த 23-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 
கூட்டத்தொடா் செப்டம்பா் 13-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில் வரும் 10,11,12 ஆகிய தேதிகளில் சட்டப்பேரவைக்கு விடுமுறை விடப்படுவதாக பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்துள்ளார். 

அதேசமயம் செப். 8ஆம் தேதி மட்டும் காலை 10 மணி மற்றும் மாலை 5 மணி என இரு வேளைகளிலும் பேரவை நடக்கிறது. மேலும் திட்டமிட்டப்படி செப்.13 ஆம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் என்றும் பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான செப்.13ஆம் தேதி கேள்வி நேரம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.