தமிழில் தொல்லியல் துறை ஈராண்டு பட்டயப் படிப்புக்கு விண்ணப்பம்

தொல்லியல் துறையில் 2021 - 2023 ஆண்டுக்கான முதுநிலைப் பட்டயப் படிப்புக்கு மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
தமிழில் தொல்லியல் துறை ஈராண்டு பட்டயப் படிப்புக்கு விண்ணப்பம்
தமிழில் தொல்லியல் துறை ஈராண்டு பட்டயப் படிப்புக்கு விண்ணப்பம்
Published on
Updated on
1 min read

தொல்லியல் துறையில் 2021 - 2023 ஆண்டுக்கான முதுநிலைப் பட்டயப் படிப்புக்கு மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தொல்லியல் துறை முதுநிலைப் பட்டயப் படிப்பின் பயிற்று மொழி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கற்றுத்தரப்படுகிறது.

விண்ணப்பதாரர்களின் கல்வித்தகுதி முதுகலை, முதுநிலை அறிவியல், முதுநிலைப் பொறியியல் பாடங்களில் ஏதேனும் ஒன்றில் குறைந்தது 55% மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தொல்லியல் பட்டயப் படிப்பிற்கான மொத்த காலி இடம் 20 எண்ணிக்கைகள், ஒவ்வொரு மாணவருக்கும் மாதம் ரூ.5000 பயிலுதவித் தொகை வழங்கப்படும். 

2021-ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் முதல் தொடங்க உள்ள ஈராண்டு கால முழுநேர தொல்லியல் முதுநிலைப் பட்டயப் படிப்பிற்கு (post graduate diploma in archaeology) விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பத்தை தொல்லியல் துறை இணையதளத்தில் https://www.tnarch.gov.in/ மூலமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 

மேலும் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 16.09.21 மாலை 5 மணிக்குள் இணையதளத்தில் கூறப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com