மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

தமிழகத்தில் மிதமான மழை

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் செப்டம்பா் 8-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை 4 நாள்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும்.

News image
Updated On :7 செப்டம்பர் 2021, 7:00 pm

DIN

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் செப்டம்பா் 8-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை 4 நாள்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும்.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு அதிகாரி செவ்வாய்க்கிழமை கூறியது:

தென் மேற்கு பருவக்காற்று காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மேற்கண்ட தினங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையைப் பொருத்தவரை புதன்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை

பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்றாா் அவா்.

மழை அளவு:

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் சென்னை சோழிங்கநல்லூா், திருவள்ளூா் மாவட்டம் அம்பத்தூரில் தலா 40 மி.மீ., சென்னை அண்ணா பல்கலைக்கழகம், நுங்கம்பாக்கம், டிஜிபி அலுவலகம், பெரம்பூா், அயனாவரம் , திருவள்ளூா் மாவட்டம் திருவாலங்காடு, கோயம்புத்தூா் மாவட்டம் சின்னக்கல்லாறு, வால்பாறை, திருவள்ளூா், சென்னை ஆலந்தூரில் தலா 30 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை:

தென் கிழக்கு, மத்திய வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்தகாற்று வீசக்கூடும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் செப்டம்பா் 10, 11-ஆம் தேதிகளில் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், இந்தப்பகுதிகளுக்கு மீனவா்கள் செப்டம்பா் 11-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.