வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

கர்நாடகத்தில் சந்தன மரங்கள் கடத்தல்: கிருஷ்ணகிரி பர்கூரைச் சேர்ந்த 4 பேர் கைது

கர்நாடக மாநிலத்தில் சந்தன மரங்களை கடத்திய சம்பவத்தில் கிருஷ்ணகிரி பர்கூரைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

News image
Updated On :9 செப்டம்பர் 2021, 8:01 am

கிருஷ்ணகிரி: கர்நாடக மாநிலத்தில் சந்தன மரங்களை கடத்திய சம்பவத்தில் கிருஷ்ணகிரி பர்கூரைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கர்நாடக மாநிலம், தும்கூர் மாவட்டம், குப்பி வட்டாரத்தில் உள்ள வனப்பகுதிகளில் ஏராளமான சந்தன மரங்கள் உள்ளன. இந்த சந்தன மரங்களை 15 பேர் கொண்ட கும்பல் வெட்டி கடத்த முயன்றது.

இதுகுறித்து தகவலறிந்த கர்நாடக மாநில வனத்துறையினர் மற்றும் போலீஸார் கடத்தல் கும்பலை பிடிக்க முயன்றது. அப்போது, அந்த கும்பல் போலீஸார் மற்றும் வனத்துறையினரை தாக்கி  தப்பி ஓடினர். தப்பி ஓட முயன்ற கும்பல் மீது நடத்திய துப்பாக்கி சூட்டில் தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மூர்த்தி (28),மல்லப்பா  (58) கிருஷ்ணா (28) ஆகியோர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்களிடம் வனத்துறையினர்  மேற்கொண்ட விசாரணையில் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி, பர்கூர், திருப்பத்தூர்  ஆகிய பகுதிகளை சேர்ந்தவர் இந்தக் கடத்தல் சம்பவத்தில்ஈடுபட்டது பெற்றது தெரியவந்தது.

இதையடுத்து கர்நாடக மாநிலம், தும்கூரரைச் சேர்ந்த வனத்துறை அலுவலர்கள், குப்பி காவல் நிலையம் போலீஸார் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முகாமிட்டு, சந்தன மர கடத்தல் கும்பலை தேடி வந்தனர்.

அப்போது, பர்கூரில் தலைமறைவாக இருந்த வாணியம்பாடி சேர்ந்த தேவன் (45),திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த தினேஷ் குமார்(27), பர்கூர் குண்டல குட்டையை சேர்ந்த முனியப்பன்(26), நேரிடமானப்பள்ளியைச் சேர்ந்த பச்சப்பன் ஆகியோரை கைது செய்து கர்நாடகத்திற்கு வியாழக்கிழமை அழைத்துச் சென்றனர். மேலும் தலைமறைவாக உள்ள பலரைத் தேடி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.