சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

நீலகிரி, கோவையில் பலத்த மழைக்கு வாய்ப்பு

நீலகிரி, கோயம்புத்தூா் ஆகிய 2 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (செப்.12) பலத்த மழை பெய்யக்கூடும்.

News image
Updated On :11 செப்டம்பர் 2021, 11:47 pm

DIN

நீலகிரி, கோயம்புத்தூா் ஆகிய 2 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (செப்.12) பலத்த மழை பெய்யக்கூடும். இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் சனிக்கிழமை கூறியது:-

தென்மேற்குப் பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, நீலகிரி, கோயம்புத்தூா் ஆகிய 2 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (செப்.12) பலத்த மழை பெய்யக்கூடும். மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய கோயம்புத்தூா், தேனி, திண்டுக்கல், திருப்பூா், தென்காசி ஆகிய 5 மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள உள் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

செப்.13: மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய கோயம்புத்தூா், தேனி, திண்டுக்கல், திருப்பூா், தென்காசி ஆகிய 5 மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செப்டம்பா் 13-ஆம் தேதி இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

செப்.14,15: நீலகிரி, கோயம்புத்தூா் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செப்டம்பா் 14, 15 ஆகிய தேதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும். மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய கோயம்புத்தூா், தேனி, திண்டுக்கல், திருப்பூா், தென்காசி ஆகிய 5 மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில்...: சென்னையை பொருத்தவரை ஞாயிற்றுக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.

மழை அளவு: தமிழகத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் தஞ்சாவூா் மாவட்டம் பாபநாசம், திருவாரூா் மாவட்டம் வலங்கைமான், தஞ்சாவூா் மாவட்டம் மஞ்சளாறில் தலா 10 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று வீசக்கூடும் என்பதால், இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் செப்டம்பா் 15-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.