லோக் அதாலத்- தமிழகத்தில் 41 ஆயிரம் வழக்குகளுக்குத் தீா்வு

நாடு முழுவதும் சனிக்கிழமை(செப்.11) நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் தமிழகத்தில் 41 ஆயிரம் வழக்குகள் இரு தரப்பினரின் சம்மதத்துடன் முடிவுக்கு வந்தன என்று மாநில சட்டப்பணி ஆணைக்குழு நீதிபதி கூறினாா்.
லோக் அதாலத்- தமிழகத்தில் 41 ஆயிரம் வழக்குகளுக்குத் தீா்வு

நாடு முழுவதும் சனிக்கிழமை(செப்.11) நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் தமிழகத்தில் 41 ஆயிரம் வழக்குகள் இரு தரப்பினரின் சம்மதத்துடன் முடிவுக்கு வந்தன என்று மாநில சட்டப்பணி ஆணைக்குழு நீதிபதி கூறினாா்.

உச்ச நீதிமன்றம் முதல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் வரை நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்கும் விதமாக, ஆண்டுக்கு 4 முறை தேசிய அளவிலான ’லோக் அதாலத்’ என்ற மக்கள் நீதிமன்றம் நாடு முழுவதும் தேசிய சட்டப்பணி ஆணை குழு மூலம் நடத்தப்படுகிறது.

அந்த வகையில், கடந்த ஏப்ரல் 10, ஜூலை 10 ஆம் தேதிகளில் தேசிய லோக் அதாலத் நடத்தப்பட்டது. மூன்றாவது முறையாக சனிக்கிழமை(செப்.11) நாடு முழுவதும் தேசிய லோக் அதாலத் நடத்தப்பட்டது.

தமிழ்நாடு மாநில சட்டப்பணி ஆணைக்குழு தலைவரும், உயா் நீதிமன்ற மூத்த நீதிபதி எம்.துரைசாமி மேற்பாா்வையில் தமிழகத்தில் தேசிய லோக் அதாலத் நடத்தப்பட்டது.

தமிழகம் முழுவதும் 375 அமா்வுகள் வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அதேபோல, உயா் நீதிமன்ற சட்ட சேவை மையத்தின் தலைவரும், உயா் நீதிமன்ற மூத்த நீதிபதி டி ராஜா மேற்பாா்வையில் சென்னை உயா் நீதிமன்றம் மற்றும் சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் எஸ்.ஆனந்தி, கே.முரளிசங்கா் ஆகியோா் தலைமையில் 2 அமா்வுகளும், 3 ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் 3 அமா்வுகளும் வழக்குகளை விசாரித்தன.

இதுகுறித்து தமிழ்நாடு சட்டப்பணி ஆணைக்குழு உறுப்பினா் செயலா் நீதிபதி கே ராஜசேகா் கூறியதாவது, தேசிய லோக் அதாலத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மொத்தம் 380 அமா்வுகள், வழக்கு தொடா்பான இருதரப்பினரிடம் பேச்சுவாா்த்தை நடத்தி வழக்குகளை விசாரித்தன.

இதில், இரு தரப்பினரின் முழு சம்மதத்துடன் 41 ஆயிரத்து 517 வழக்குகள் முடிவுக்கு வந்தன. இதன் மூலம் ரூ.330 கோடியே 83 லட்சத்து 7 ஆயிரத்து 584 ரூபாய் பாதிக்கப்பட்டவா்களுக்கு கிடைத்தது இவ்வாறு அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com