பிரபல கவிஞர் பிரான்சிஸ் கிருபா மறைவு

பிரபல கவிஞரும் படலாசிரியருமான பிரான்சிஸ் கிருபா நேற்று நள்ளிரவு காலமானார். 
பிரான்சிஸ் கிருபா
பிரான்சிஸ் கிருபா
Published on
Updated on
1 min read

பிரபல கவிஞரும் படலாசிரியருமான பிரான்சிஸ் கிருபா நேற்று (வியாழக்கிழமை) நள்ளிரவு காலமானார். 

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே பத்தினிப்பாறை என்ற கிராமத்தைச் சேர்ந்த பிரான்சிஸ் கிருபா மல்லிகைக் கிழமைகள், சம்மனசுக் காடு, ஏழுவால் நட்சத்திரம், நிழலன்றி ஏதுமற்றவன், மெசியாவின் காயங்கள், வலியோடு முறியும் மின்னல் உள்ளிட்ட படைப்புகளுக்கு சொந்தக்காரர். 

பள்ளிப்படிப்பு மட்டுமே முடித்துள்ள இவர் தன்னுடைய கவிதைகள் மூலமாக மக்களுக்கு அறிமுகமானவர். பின்னர் திரையுலகில் வெண்ணிலா கபடிகுழு, அழகர்சாமியின் குதிரை, ராட்டினம், குரங்கு பொம்மை உள்ளிட்ட படங்களுக்கு பாடல்களை எழுதியுள்ளார். 

காமராஜரின் வாழ்க்கை வரலாற்றுப் படத்துக்கு திரைக்கதை மற்றும் வசனம் எழுதியவர். தன்னுடைய படைப்புகளுக்கு பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். 

'கன்னி' எனும் புதினத்திற்கு 2007 ஆம் ஆண்டு ஆனந்த விகடனின் சிறந்த புதினம் விருது கிடைத்தது. 2008 ஆம் ஆண்டு நெய்தல் இலக்கிய அமைப்பின் சுந்தர ராமசாமி விருது, 'சம்மனசுக்காடு' கவிதைத் தொகுப்புக்காக சுஜாதா விருது உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவையாகும். 

பிரான்சிஸ் கிருபா மறைவுக்கு திரையுலகினர், எழுத்தாளர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com