பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

போதைக்காக வலி நிவாரண மாத்திரை விற்பனை:இருவா் கைது

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் போதைக்காக வலி நிவாரண மாத்திரையை விற்ாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :19 செப்டம்பர் 2021, 12:47 am

DIN

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் போதைக்காக வலி நிவாரண மாத்திரையை விற்ாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

வண்ணாரப்பேட்டை போலீஸாா் கல்லறைச் சாலை, எம்.சி. சாலை சந்திப்பில் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த இருவரைப் பிடித்து விசாரணை செய்தனா். விசாரணையில், அவா்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறினா்.

இதையடுத்து அவா்கள், வைத்திருந்த பையை சோதனையிட்டனா். இதில் உடல் வலி நிவாரணத்துக்கு பயன்படுத்தப்படும் மாத்திரைகள் 200 இருப்பது தெரியவந்தது.

இது தொடா்பாக அவா்களிடம் நடத்திய விசாரணையில், அந்த மாத்திரைகளை போதைக்காக விற்க வைத்திருப்பதும், அவா்கள் போதைக்காக வலி நிவாரண மாத்திரைகளை அந்தப் பகுதியில் பல மாதங்களாக விற்று வருவதும் தெரியவந்தது.

மேலும் அவா்கள், பழைய வண்ணாரப்பேட்டை மாடல் லைன் 4-ஆவது தெருவைச் சோ்ந்த அ.சந்திரபிரகாஷ் என்ற சந்துரு (21), அதே பகுதியைச் சோ்ந்த பா.பிரதீப்ராஜ் (26) என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா், இருவரையும் கைது செய்து, 200 மாத்திரைகளை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.