1 - 8ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கலாமா? பெற்றோர் கருத்து

1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகளை திறப்பது தொடர்பாக தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.
1 - 8ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கலாமா? பெற்றோர் கருத்து
1 - 8ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கலாமா? பெற்றோர் கருத்து
Updated on
2 min read


1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகளை திறப்பது தொடர்பாக தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.

தமிழகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகளை எப்போது திறக்கலாம் என்பது குறித்து ஆய்வு அறிக்கையை, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கியுள்ளார். இதையடுத்து, பள்ளிகள் திறப்பு குறித்து மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்டோரிடம் முதல்வர் ஆலோசனை நடத்தி, விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோரிடமும் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில், உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், அது குறித்து தமிழக அரசு கவனமாக கண்காணித்து, உயர்நிலைக் குழுவினருடன் ஆலோசித்து அடுத்தக்கட்டமாக பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்றார்.

ஆனால், 1 முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது என்பது சற்று சவாலானது என்கிறார்கள் சில பெற்றோர். இது குறித்து தாம்பரத்தைச் சேர்ந்த கல்வி உரிமை ஆர்வலர் கே.எல். விமல் கூறுகையில், தற்போதைய கரோனா பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின்படி, ஒரு வகுப்பறையில் 20 மாணவர்கள் மட்டுமே அமர வைக்க முடியும். அதனால், பல பள்ளிகளும், துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளி வகுப்பறைகளைத்தான், உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் அமர்ந்து படிக்க ஒதுக்கியுள்ளன. இந்த வேளையில், அனைத்து வகுப்பினருக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டால் மாணவர்களுக்கு போதுமான வகுப்பறைகள் இருக்காது. இதனால் சமூக இடைவெளி என்பதை பின்பற்ற முடியாமல் போகலாம் என்கிறார்.

பெற்றோர் இது குறித்து கூறுகையில், சுழற்சி முறையில் பள்ளிகளைத் திறக்கலாம் என்று பள்ளிக் கல்வித் துறை பரிந்துரை செய்துள்ளது. இதனால் பள்ளி ஆசிரியர்களின் பணிச்சுமை அதிகரிக்கும். ஏற்கனவே, ஆன்லைன் கல்வி முறையால் பள்ளி ஆசிரியர்கள் கடும் பணிச்சுமைக்கு ஆளாகியுள்ளனர். சுழற்சி முறை பள்ளியால், மாணவர்களுக்கும் குழப்பம் ஏற்படும் என்று ஆறாம் வகுப்பு மாணவரின் பெற்றோரான ராஜலட்சுமி தனசேகரன் கூறுகிறார்.

பள்ளிகள் உடனடியாக திறக்கப்பட வேண்டும். இல்லையென்றால், பள்ளிகளிலிருந்து இடைநிற்கும் மாணவர்கள், கூலி வேலைக்குச் செல்லும் சிறார்கள் மற்றும் சிறார் திருமணங்கள் அதிகரிக்கும் என்று கவலை தெரிவிக்கிறார் தமிழ்நாடு ஆசிரியர்கள் கழகத்தின் தலைவர் பி.கே. இளமாறன்.

தமிழகத்தில் அதிகமான சிறார் திருமணங்கள் குறித்து புகார்கள் வருகின்றன. பள்ளிகள் திறக்கப்படாததால், சத்துணவு கிடைக்காமல் ஏராளமான குழந்தைகளின் உடல்நலன் பாதிக்கப்பட்டுள்ளது என்கிறார்.

சுகாதாரத் துறையினரோ, பள்ளிகளைத் திறக்க இதுவே நல்ல நேரம். ஆனால், கரோனா பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரமாகப் பின்பற்ற வேண்டும்.  சிறார் திருமணம் மற்றும் சிறார் தொழிலாளர்கள் முறை ஒழிக்கப்பட வேண்டும் என்றால் பள்ளிகள் திறக்கப்பட வேண்டியது அவசியம். கரோனா பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முற்றிலும் பின்பற்ற வேண்டும்.

துவக்கப் பள்ளிகள் குறைந்த வேலை நேரத்தில், இடைவேளை இல்லாமல் செயல்பட அனுமதிக்கலாம் என்கிறார் பொது மருத்துவர் டாக்டர் வி. சுலேகா.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com