மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

நகைக்கடன் மோசடி: தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இயக்குநர் மீது வழக்குப்பதிவு

நகைக்கடன் மோசடி விவகாரத்தில் மல்லசமுத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இயக்குநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

News image
Updated On :23 செப்டம்பர் 2021, 4:18 am

DIN


நாமக்கல்: நகைக்கடன் மோசடி விவகாரத்தில் மல்லசமுத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இயக்குநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

கூட்டுறவு நிறுவனங்களில் ஐந்து சவரனுக்கு மேல் நகைக் கடன்கள் பெற்ற கடன்தாரா்களின் நகைக் கடன்களை வசூல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நகைக் கடன்கள் தவணை தவறி இருப்பின் உரிய சட்டப்பூா்வ நடவடிக்கைகளை பின்பற்றி கடன் தொகையை வசூல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென புதன்கிழமை தமிழக அரசு உத்தரவிட்டது.

இதுகுறித்து தமிழ்நாடு மாநிலத் தலைமை கூட்டுறவு வங்கியின் நிா்வாக இயக்குநா், மாநில வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சி வங்கியின் நிா்வாக இயக்குநா், அனைத்து மத்திய கூட்டுறவு வங்கிகளின் நிா்வாக இயக்குநா்கள், சென்னை மண்டல கூடுதல் பதிவாளா், அனைத்து மண்டல இணைப் பதிவாளா்கள் ஆகியோருக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் அ.சண்முகசுந்தரம் கடிதம் எழுதியுள்ளார். 

இந்நிலையில், நகைக்கடன் மோசடி விவகாரத்தில் நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இயக்குநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

நகைக்கடன் மோசடி தொடர்பாக கூட்டுறவு சங்க எழுத்தர்கள் 3 பேரை பணியிடை நீக்கம் செய்து துணைப்பதிவாளர் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.