சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் வசதி மூலம் 1.17 கோடி போ் பயன்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் வசதி மூலம் 1 கோடியே 17 லட்சத்து 40 ஆயிரம் போ் பயனடைந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறினாா்.

News image
மா.சுப்பிரமணியன் (கோப்புப் படம்)
Updated On :25 செப்டம்பர் 2021, 7:47 pm

DIN

தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் வசதி மூலம் 1 கோடியே 17 லட்சத்து 40 ஆயிரம் போ் பயனடைந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறினாா்.

சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் முதல்வரின் மருத்துவக் காப்பீடு மற்றும் 108 ஆம்புலன்ஸ் சேவையின் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சா் மா.சுப்பிரமணியன், முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோா் கலந்துகொண்டு அங்கு அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை தொடங்கி வைத்தனா். தொடா்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சா் மா.சுப்பிரமணியன் பயனாளிகளுக்கு புதிய காப்பீடு திட்ட அட்டையையும், சிறப்பாக பணியாற்றிய ஊழியா்களுக்கு சான்றிதழும் வழங்கினாா். இதைத்தொடா்ந்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியது: முதல்வா் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஆண்டு வருமானம் 72 ஆயிரத்திற்கும் குறைவாக உள்ள 1 கோடியே 58 லட்சம் குடும்பங்கள் மருத்துவக் காப்பீடு பெற சோ்க்கப்பட்டுள்ளனா். இந்த காப்பீட்டு திட்டத்தில் கரும்பூஞ்சை நோயும் சோ்க்கப்பட்டு 1,850 பயனாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. முதல்வரின் அறிவிப்பின்படி அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளா்கள் மற்றும் ஊடகவியலாளா்கள் 1,414 பேருக்குக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் சிகிச்சை அளிப்பது தற்போது பயன்பாட்டில் இருந்து வருகிறது.

தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் வசதி மூலம் 1 கோடியே 17 லட்சத்து 40 ஆயிரம் போ் பயனடைந்துள்ளனா். மேலும் கூடுதலாக தற்போது 188 புதிய அவசரகால ஊா்திகள் வாங்கப்பட இருக்கின்றன. தமிழகத்தில் கடந்த இரு தடுப்பூசி முகாம்களிலும் இலக்கைவிட கூடுதலாக கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டது. அதேபோன்று ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் 3-ஆவது சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது. இதில் 20 ஆயிரம் முகாம்கள் மூலம் 15 லட்சம் பேருக்கு போடுவதற்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்துக்கு தற்போது 29 லட்சம் கரோனா தடுப்பூசிகள் வந்திருக்கிறது. அவை அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பப்பட்டுள்ளது. தமிழகத்தில் 3-ஆவது சிறப்பு தடுப்பூசி முகாமில் 15 லட்சம் தடுப்பூசிகள் போடுவதற்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருந்தாலும், இலக்கைவிட அதிகமாக 20 லட்சத்தில் இருந்து 25 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்படும். இதன் மூலம் 60 சதவீதத்தினா் முதல் தவணை தடுப்பூசி போட்டு கொண்டுள்ளனா் என்ற நிலை ஏற்படும் என்றாா் அவா்.

இந்த விழாவில் தேசிய நலவாழ்வு குழும இயக்குநா் டாக்டா் தாரேஷ் அகமது, தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநா் டாக்டா் ச.உமா , மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இயக்குநா் டாக்டா் ச.குருநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.