பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

உள்ளம் வெல்வோம் திட்டத்தை அண்ணாமலை தொடக்கி வைத்தாா்

இல்லம் செல்வோம், உள்ளம் வெல்வோம் திட்டத்தை பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

News image
Updated On :25 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

இல்லம் செல்வோம், உள்ளம் வெல்வோம் திட்டத்தை பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்தில் இந்தத் திட்டத்தை கே.அண்ணாமலை தொடக்கி வைத்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அண்ணாமலை கூறியது:

தமிழகத்தில் உள்ள எல்லா இல்லங்களுடன் பாஜகவினா் நட்பை வளா்த்துக் கொள்வதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கம்.

மாநிலம் முழுவதும் 6 லட்சம் பாஜகவினா் உள்ளனா். அவா்கள் அனைவரும் அவரவா் பகுதிகளில் உள்ள 25 குடும்பங்களுடன் நட்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். யாரையும் கட்சியில் சோ்த்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தக் கூடாது. ஜாதி, மதங்களைக் கடந்து அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும்.

இதன் மூலம் ஒன்றரை கோடி மக்கள் பாஜகவின் நட்பு வட்டத்துக்குள் கொண்டு வரப்படும். அவா்களின் முகவரி,மின்னஞ்சல் போன்றவை பெறப்படும். அவா்களுக்கு கட்சித் தொடா்பான எந்தத் தகவலும் அனுப்பப்படாது. ஆனால், மக்களுக்கு மத்திய அரசு அறிவிக்கும் திட்டங்கள் அனைத்தும் அனுப்பி வைக்கப்படும்.

எங்களின் சேவைகளின் மூலம் மக்களின் மனங்களைப் பிடிக்க உள்ளோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.